நோட் பேட் - Note pad

நோட் பேட்

தேதி: July 27, 2015

4
Average: 3.5 (4 votes)

 

சிறிய நோட் பேட்
2 நிறத்தில் அட்டைத் துண்டுகள்
ஸ்கேல்
பென்சில்
ஸ்கோரர்
க்ளூ
டபுள் சைடட் டேப்
கத்தரிக்கோல்
Decorative scissors (விரும்பினால்)
க்ராஃப்ட் நைஃப்
3 D ஸ்டிக்கர்கள்
Nail Art Rhinestones
இடுக்கி
லேஸ்
வெல்க்ரோ

 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவை அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
தேவையான பொருட்கள்
நோட் பேடை அட்டையின் ஒரு கரையோடு வைத்து சுற்றிலும் அடையாளம் செய்து கொள்ளவும். இரண்டு பக்கங்களிலும் பேடின் உயரத்தைக் குறித்துக் கொள்ளவும். அவற்றின் வெளிப் பக்கங்கள் பேடின் அளவை விட சற்றுக் குறைவானதாக வைத்து அடையாளம் செய்யவும்.
நோட் பேட்
வெளிக் கோட்டின் வழியே வெட்டிக் கொண்டு உட்கோடுகளை ஸ்கோரரால் அழுத்தி வரைந்து மடித்துக் கொள்ளவும்.
பேப்பர் மடிப்பு
நோட் பேடின் பின்பக்கம் டபுள் சைடட் டேப் போட்டு ஒட்டி விடவும்.
நோட் பேட்
அதை வெட்டி மடித்து வைத்துள்ள அட்டையின் உள்ளே நடுப் பகுதியில் ஒட்டவும்.
நோட் பேட்
அட்டையின் நிறத்துக்குப் பொருத்தமான ஸ்டிக்கர் ஒன்றை இரண்டாவது அட்டையில் ஒட்டி சுற்றிலும் வெட்டி அப்படியே தொடர்ந்து மீதியை நீளமாக வெட்டி எடுக்கவும். நீள அட்டைத் துண்டு பேடின் பின் பக்கம் ஆரம்பித்து ஒரு பக்கத்தைச் சுற்றி முன்பக்கம் வந்து முடிய வேண்டும். பின் பக்கம் வளைத்து வெட்டி வைக்கவும். முன்பு பெரிய அட்டைக்கு மடித்தது போல பேடின் உயரத்திற்கேற்ப இந்த அட்டையிலும் மடிப்புகளை அழுத்தி விடவும்.
பேப்பர்
பேடை சரியாகப் பிடித்துக் கொண்டு, இடது பக்கம் தெரியும் அட்டையை மடித்து, அதன் மேல் டபுள் சைடட் டேப் கொண்டு லேஸை ஒட்டி ஓரங்களைச் சீராக வெட்டி விடவும்.
பேப்பர்
பேடை ஒரு பக்கம் மடித்தபடி காட்டியுள்ள விதமாக கவிழ்த்துப் போட்டு ஸ்டிக்கரோடு உள்ள நீள அட்டையை ஒட்டி விடவும்.
பேப்பர் ஒட்டுதல்
அட்டைத் துண்டுகளைச் சரியானபடி மடித்து விடவும். ஒரு அட்டைத் துண்டை ரிப்பன் வடிவில் வெட்டி, அதன் நுனியைக் கத்தரிக்கோலினால் பிடித்து மெதுவாக வளைத்து விடவும். அலங்காரமாக அங்கங்கே கற்களை ஒட்டிவிடவும்.
நோட் பேட் அலங்காரம்
ஸ்டிக்கரின் பின்பக்கம் சின்னதாக ஒரு துண்டு வெல்க்ரோவை (பிரிக்காமல் இணைந்தபடியே) ஒட்டவும்.
வெல்க்ரோ
அப்படியே அட்டைத் துண்டை மடித்து வெல்க்ரோவின் மறுபக்கத்தையும் ஒட்டிக் கொண்டால் சரியான இடத்தில் பிடித்துக் கொள்ளும்.
வெல்க்ரோ நோட் பேட்
இப்போது கைப்பையில் எடுத்துப் போகக் கூடிய அழகான, கைக்கடக்கமான நோட் பேட் தயார்.
அழகிய நோட் பேட்
இவை என் குட்டி மாணவர்கள் சிலர் அன்னையர் தினத்திற்காகத் தயாரித்தவை. அலங்கரிக்க லேஸுடன் 2D ஸ்டிக்கர்களையும் பஞ்ச் செய்த பூக்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஓரங்களை அலங்காரக் கத்தரிக்கோலினால் வெட்டியிருக்கிறார்கள். வெல்க்ரோவுக்குப் பதில் காந்தத் துண்டுகள் (pieces of fridge magnet) ஒட்டப்பட்டிருக்கின்றன.
அழகிய நோட் பேட்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகாய் இருக்கிறது! :)

அன்புடன்,
மகி

சூப்பர்
நோட் பேட் இவ்வளவு அழகா அலங்கரிச்சுட்டீங்களே

நான் 'பாட்' என்றுதான் எழுதியிருந்தேன் மகி. தட்டி முடிந்து குறிப்பைப் படிக்க... அங்கங்கே 'பாடை' தெரிந்தது. ;D என்னாலேயே சகிக்க முடியவில்லை. ;))

இதுக்கெல்லாம் நல்ல தமிழ்ல தட்டினா... எனக்கே நாலு வருஷம் கழிச்சுப் படிக்க எதுவும் புரியாது. ;D பொருத்தமான சொல்லைத் தெரிந்து தட்டுவதை அறுசுவைக் குழுவினர் பொறுப்பில் விட்டுவிட்டேன். பாடைக்கு... பேடை நல்லாவேதான் இருக்கு. ;D நன்றி டீம். @}->--

‍- இமா க்றிஸ்

தேவி... இந்த யோசனை எங்கள் அதிபரின் காரியதரிசியுடையது. :-)

அவரது மகள், தன் தோழியின் 21வது பிறந்தநாளன்று விழாவின் பின் வீட்டிற்குக் கொண்டு வந்த அன்பளிப்புப் பையில் ஒரு note pad இருந்திருக்கிறது. இவருக்கு அதைப் பார்த்ததும் பாடசாலைக் கைவினை வகுப்பு நினைவு வந்திருக்கிறது. கொண்டு வந்து காட்டி, "கொஞ்சம் மாற்றி சின்னவர்களைச் செய்ய வைக்க முடியாதா?" என்று, கேட்டார்.

குழந்தைகளின் வயது, என் கையில் அகப்படும் பொருட்கள் & எனக்குக் கொடுக்கப்படும் நேரம் என்பவற்றை பொறுத்து மாற்றங்களோடு நான்கைந்து வருடங்களாக அன்னையர் தினத்திற்கு முன்னால் வரும் வாரம் இந்தக் கைவேலையைச் சொல்லிக் கொடுக்கிறேன்.

என் பையிலிருந்தது தீர்ந்து போய்விட்டது. புதிதாகச் செய்யும் போது அறுசுவைக்காக படம் எடுத்து அனுப்பினேன்.

உங்கள் பாராட்டுக்கு நன்றி சகோதரி. :-)

‍- இமா க்றிஸ்