9 மாத குழந்தைக்கு இரத்தகட்டு

தோழிகளே, என் 9 மாத மகள் தவழும் போது கீழே விழுந்து விட்டாள். நெற்றியில் இரத்தம் கட்டி வீக்கமா இருக்கு. 5 நாள் ஆகி விட்டது இன்னும் கட்டி கரைய வில்லை.
விழுந்ததும் அயோடெக்ஸ்(Iodex) போட்டேன். 3 நாளா கை வைக்க விட வில்லை. ஆனாலும் தூங்கும் போது IODEX போட்டேன். இப்போ வலி இல்லை போல ஆனால் வீக்கம் இருக்கிறது.
வீக்கம் குறைய என்ன செய்யனும். ஆலோசனை கூறுங்கள் தோழிகளே..

Adipatta udane ice othadam koduthaa viikkam kuraiyum. Ippo kuda koduthu paarunga.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thrombophom எனும் oinment ஐ மெடிக்௧ல்ல வாங்குங்௧
வாங்கி 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கொஞ்சமா௧ எடுத்து அழுத்தி தேய்க்காமல் லேசா௧ தடவி விட்டு விடுங்௧ள்

வீக்௧மோ,இரத்தகட்டு எது இருந்தாலும் சரியாகிவிடும்

ML

அன்புள்ள‌ லதா.
சமையலுக்குப் பயன்படுத்தும் புளியை நன்கு கெட்டியாகக்
கரைத்து அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கொதிக்க‌ வைத்து பேஸ்ட் போல் கெட்டியாக்கி அதை அடிபட்ட‌ எந்த‌ வீக்கத்திற்கும் போடலாம். வீக்கம் கரைவதோடு மட்டுமல்ல‌ இரத்தம் கட்டிப்போய் அந்த‌ இடம் கருப்பாக‌ ஆனாலும்
ஐந்து அல்லது ஆறு நாளில் சரியாகிவிடும். தினந்தோறும் தடவ‌ வேண்டும்,
வேறு எதுவும் போட‌ வேண்டிய‌ அவசியம் இல்லை. நாளுக்கு 3 அல்லது 4 தடவை தடவவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்