கலாம், கலாம், அப்துல்கலாம்

கலாம் கலாம் அப்துல் கலாம்
பிறப்பு சம்பவமாக‌ இருக்கலாம்
இறப்பு சகாப்தமாக‌ இருக்கட்டும் என்றார்
சகாப்தமாக‌ சாதித்தும் காட்டினார் நம்
கலாம் கலாம் அப்துல் கலாம்.

ஏவுகனை தந்தை, ஆசான் என்ற‌ ஏணிப்படி
விண்வெளியின் விடிவெள்ளி, விந்தையான‌ விஞ்ஞானி,
அக்கினிசிறகு படைத்த‌ அறிவார்ந்த‌ அரசன்
ஆகாய‌ உச்சிதான் என் லட்சியம் என‌ பறந்தான் பாரத‌ மகன்.

மாணவர்களே வினா எழுப்புக்கள் விடைக் காணுங்கள்
மக்களே கனவுக் காணுங்கள் கனவை நினைவாக்குங்கள்
இளைஞர்களே இந்தியாவை வல்லரசாக‌ மாற்றுங்கள்
வாலிபர்களே வளமான‌ வாழ்க்கைக்கு பாதை அமையுங்கள் என்றார்.

மனித‌ நேயப் பண்பிலும், மதச்சார்பற்ற‌ பண்பாட்டிலும்
பாரத‌ மக்களுக்கு ஓர் கைக்காட்டி, ஓர் வழிக்காட்டி
தென் கோடியில் பிறந்து தடம் பதித்த‌ மாமனிதனை
வடக் கோடியில் வடம் பிடித்து அழைத்துக் கொண்டான் ஆண்டவன்.

வாருங்கள் மக்களே வாருங்கள்
கலாமின் கனவை நினைவாக்கலாம்
கலாமின் வல்லரசை உருவாக்கலாம்
கலாமின் லட்சியப்படி நடக்கலாம்
கலாமின் காலத்தை கல்வெட்டாக்கலாம்
வாருங்கள் மக்களே வாருங்கள்.

5
Average: 4.3 (4 votes)

Comments

" தினந்தோறும் ராமேசுவரத்தில் பாவங்களே! கழிக்கப்படும்‍‍‍‍, ஆனால்
தற்போது ஒர் புண்ணியம் விதைக்கப்பட்டுள்ளது!!! "

"Patience is the most beautiful prayer !!!"

ஹாய் சங்கமி,

கலாமிற்கு சலாம்\\\\ஓர் புண்ணியம் விதைக்கப்பட்டுள்ளது\\\\உண்மையான‌ வார்த்தைகள். நன்றிமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

என்னால் இந்த இழப்பை தாங்கவே முடியவில்லை தோழீகளே.என்னால் அழையை அடக்க முடியவில்லை.கடவுள் மேல் வெறுப்புதான் வருகிறது.அவர் இறக்க வில்லை என் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்

ஏமாறாதே|ஏமாற்றாதே

என்னாலும் இந்த இழப்பை தாங்க முடியவில்லை.ஒரு நேர உணவை தவிர்த்து அஞ்சலி செலுத்தினேன்.கலாம் ஐயா பயணித்த இரயிலில் பயணம் செய்வதை நினைத்துப் பெருமைபடுகிறேன்.திங்கட்கிழமை புதுக்கோட்டையில் இருந்திருந்தால் நேரில் அஞ்சலி செலுத்தியிருப்பேன்..

அவரின் ஆன்மா சாந்தியடைய நாம் அனைவரும் நம் பிள்ளைகளுக்கு அவரை பற்றியும் அவரின் கருத்துக்களை பற்றியும் சொல்லிவளர்க்க வேண்டும்...கலாம் ஐயா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வணங்குகிறேன்...இறைவா! நல்ல மனிதர்களை எல்லாம் எடுத்து சென்றுவிடுகிறாயே?????

அன்பு தோழி. தேவி

"நன்றி அறிதல்,பொறையுடைமை,இன்சொல்லோடு,
இன்னாத‌ எவ்வுயிர்க்கும் செய்யாமை,கல்வியோடு,
ஒப்புரவு ஆற்றல் அறிதல், அறிவுடைமை,
நல்லினத்தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய‌ ஆசார‌ வித்து" என்பதற்கு எடுத்துக்காட்டாய்
"அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்" என்ற‌ வள்ளுவன் வாக்கிற்கேற்ப‌
ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு ஆழியாக‌ அமைந்து,
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் என்பதை நிலைநாட்டி,
"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
எந்நோற்றான் கொல்" என்னும் சொல்லுக்கு ஏற்ப‌ தன்னைப் பெற்ற‌
தாய் தந்தை குரு தெய்வம் காட்டிய‌ பாதையில் வாழ்ந்து பல்கலை வல்லுனராக‌,
காட்சிக்கு எளியராக‌, பெறாத‌ பிள்ளைகளாம் மாணவச் செல்வங்களுக்கு
ஞானத் தந்தையாக‌ விளங்கிய‌ பேராசிரியப் பெருமகனார் பாரதத்தின் ரத்தினம்,
மாபெரும் சிந்தனைச் சிற்பி தங்கத் தமிழால் தரணி ஆண்ட‌ அறிவியல் மேதை
நம் இனிய‌ முந்நாள் குடியரசுத் தலைவர்,
மேதகு.டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஐயா அவர்கள்,
வானையே அளந்தாலும் பெற்ற‌ தாயும் பிறந்த‌ பொன்நாடும் நற்றவ‌ வானினும்
நனிசிறந்தனவே என்று தம் பெற்றோருடன் தன் தாய்மண்ணின் மடியிலேயே
இயற்கையோடு இன்று இரண்டறக் கலந்தார்.
நம் கண்களை விட்டுமறைந்தாலும் கருத்தை விட்டு மறையவில்லை.
"மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத்
தாம் மாய்ந்தனரே" என்பதற்கேற்ப‌ அவரின் பூத‌ உடல் மறையினும்
அவரின் எண்ணங்களும் சுவாசமும் அவர் கண்ட‌ கனவுகளை நனவாக்கிட‌
நம் காலப் பீஷ்மப் பிதாமகன் என்றென்றும் நம்மை வழிநடத்திட‌ எல்லாம் வல்ல‌
இறைவனை இறைஞ்சுவோம்.
பணிவன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.