தூங்கவைக்கும் முறை

என் குழந்தைக்கு 8 மாதம் நடக்கிறது.. அவன் எப்போதும் என்னிடம் பால் குடித்து கொண்டே தூங்கி பழகிவிட்டான். இந்த முறை சரியானதா.. இப் பழக்கத்தால் பால் மறக்க வைப்பதில் சிரமம் ஏற்படுமா? இவனை வேறு வழியில் தூங்க வைக்க முயற்சி செய்து பார்த்தேன். எதுவும் முடியவில்லை.. 1 வயது வரை பால் தரலாம் என்று உள்ளேன்.. அதன் பிறகு எப்படி தூங்கவைப்பது.. இப்போது தூக்கம் வந்தால் அழுது ஆர்பாட்டம் செய்வான்.. பால் கொடுத்தால் தூங்கி விடுவான்... இப்போதே இப்பழக்கத்தை மாற்ற வேண்டுமா.. இல்லை 1 வயதில் சரி ஆகி விடுமா.. தோழிகள் தயவுசெய்து ஆலோசனை தரவும்

அதனால் தான் அறுசுவைக்குள் பதிலளிக்க வருவதில்லை.பெரியவனுக்காக ஸ்கூல் ,& வீட்டிற்கு என்று அலைவதால் சின்னவரை கவனிக்க முடியவில்லை....சின்னவன் ஒல்லியாக இருக்கின்றான்.கவலையாக இருக்கு.
தினமும் வலி கள் இருக்கின்றது உடம்பில்.walker வைத்து இப்ப தான் உட்கார வைக்கிறேன்.தூளியில்(தொட்டிலில்) குப்புறப்படுத்து கொள்கிறான்,,என்ன செய்வது?

அம்மா ரொம்ப நீளமாக அனுப்பியிருக்கேன் படிக்க கஷ்டமாக இருக்கும்.....

அன்பு தோழி. தேவி

"ஸ்கூலிலிருந்து வந்ததும் அழுது தூங்கி விடுகிறான்.அவன் எழும்போது என்னால் ஊட்ட முடியவில்லை ஸ்கூல் போய்விடுகிறோம்."
‍‍மதியம் ஸ்கூலிலேயே சின்னவருக்கும் குழந்தைகளோடு ஊட்டிவிடுங்கள்.
"மதியம் ஸ்கூலிலிருந்து வந்ததும் தூங்குகிறான்.அப்புறம் எழுவது லேட்டாகின்றது"
மதிய‌ வெயிலில் வரும் போது சின்னவர் களைப்படைந்து தூங்கிவிடுகின்றார்.களைப்பு மற்றும் பசியால் தூங்குவதால் எழுவது தாமதமாகின்றது.

நிஷா

நிஷா ரொம்ப நன்றி....நான் அப்படியே செய்து பார்க்கிறேன்.....

அன்பு தோழி. தேவி

Hai imma sister June 29th lasta period aanen. Inaiyoda crta 40 days aguthu
But apaapa lighta vairu valikira mathiri iruku. Enaku mrge mudinchu 2 years
Aguthu in um baby illa. Nan conceive a irukena enanu theriyala 45
Days la pregnant kit test pani pakalamnu iruken. Ovalation date irregular periods
Na epd calculate panurathu??? Enaku oru nala vali soluga amma plsss

------------------------------
செல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.
I love my baby

இம்மா அக்கா சொன்ன மாதிரி அறுசுவைக்கு பதில் அனுப்புவதை சற்று குறைத்துக்கொள்ளுங்கள். நார்மாலாகவே நெட் உபயோகப்படுத்துவதை குழந்தைகள் தூங்கும் நேரத்தில் செய்யுங்கள். தொட்டிலில் வெகுனேரம் ஆட்டி பழக்கப்படுத்தினால் குழந்தைகள் அதயே பழக்கமாக்கி விடுவார்கள். ஆனால் பயப்பட‌ வேண்டியதே இல்லை இன்னும் சில‌ மாதத்திலேயெ தொட்டிலில் தூங்கும் பழக்கம் மாறிவிடலாம்.நீங்க‌ ஓய்வா இருக்குர நேரத்தில் பக்கத்தில் போட்டு தூங்க‌ பழக்குங்கள், நன்கு தூங்கிய‌ பின் மெதுவாக‌ தொட்டிலில் இருந்து எடுத்து விரிப்பில் 3 பக்கத்திலும் தலையனைகள் வைத்து தூங்க‌ வையுங்கள்.
என் இரு குழந்தைகளுக்கும் 2 வயது வித்தியாசம் தான்.என் பெரிய‌ பெண்ணை ஸ்கூலில் விடுகிற‌ பொழுது என் சின்ன‌ பெண்ணுக்கும் பால் குடுத்து, கையில் பிஸ்கட் எடுத்துக்கொண்டு தலையில் அழகான் விரிந்த‌ தொப்பி(வெயில் படாமல் இருக்க‌) மாட்டி விட்டு கூட்டிச்சொல்வேன். வரும்பொழுது விளையாட்டு காட்டி பேசிக்கொண்டே வருவேன், அதனால் தூங்காமல் வருவாள்.
7 மாதம் ஆவதால் குழந்தைகள் தொட்டிலிலும் கவிழ்ந்து படுக்க தான் செய்யும். தொட்டிலின் ஒவ்வொரு வாய் பகுதியின் இரு ஓரங்களை முடிச்சிடவும், இதனால் குழந்தை வெளியில் தவழ்ந்து தலைக்காட்டாது. சிலர் ஊக்கு, க்லிப் மாட்டுவார்கள் அது தொட்டிலை கிழிக்கவும், பிள்ளைகளை காயப்படுத்தவும் வாய்ப்புள்ளது.
நீங்கள் எங்கு நின்று வேலைப்பார்த்தாலும் பிள்ளையை வாக்கரில் இருத்தி பக்கத்திலேயெ நிற்த்திக்கொள்ளவும். ஆனாலும் எப்பொழுதும் அதிக‌ கவனம் தேவை, அதிலும் சமையலறையில் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். மழழைகளின் சிரிப்புடன் உங்கள் வாழ்வு மலர்ந்திட‌ என் வாழ்த்துக்கள்..:‍)

மேலும் சில பதிவுகள்