பெண் குழந்தைகளின் உடல் வளர்ச்சி மாற்றம் பற்றி கூறவும். ப்ளீஸ்

என் மகளுக்கு 9 வயது ஆகிறது, 5 மாததிற்கு முன் மார்பு வலிக்கிறது என்று கூறினால்,மெதுவா தொட்டாலும் வலிக்கும்மா என்று கூறினால். வலியும், கெட்டித்தன்மையுடனும் இருந்தது. என் தாய் மற்றும் இன்னும் சிலர், பருவ‌ மாற்றம் தான் கவலை படாதே என்று சொன்னதால் நானும் அவளை இப்டிதான் இருக்கும் வளருதல‌ சரி ஆகிறும்னு தேத்திவிட்டேன்.
2 மாதங்களாக‌ வெள்ளையா சளி போல சுச்சு போறப்ப‌ போகுதுமானு சொல்றா. எனக்கு என்ன‌ சந்தேகம்னா இது வெள்ளைப்படுதல் போலா அல்லது கிருமி தொற்றா? இந்த‌ வயதிலேயே இப்படி வெள்ளைப்படுமா? இப்படி வருவதால் விரைவில் பெரியவல் ஆகிவிடுவாலோ என்று பயமாக‌ இருக்கிறது. சின்ன‌ குழந்தை, மெலிந்த‌ உடல் வாகுதான்.
சில‌ வறுடமாக பிராய்லர் கோழியோ, முட்டையோ கூட‌ குடுப்பதில்லை.தயவு செய்து என் சந்தேகங்களுக்கு தெளிவு படுத்தவும் தோழிகளே..

Ippodhu 10 vayadhil periyamanushi aaguradhulaam sagajam. Aanaalum maarbu vali vellaipadudhal.. edhuku dr paarthuduradhu nalladhu. Ippadi dhaan irukkumnu ninaichuttu irukaama oru ettu poi kaatidunga.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்கள் சொல்வது கருப்பை வளர்ச்சி மாற்றங்களினால்தான். உள்ளே திசுக்கள் புதுப்பித்தல் நடக்கும் போது இப்படி இருக்கும். //விரைவில் பெரியவல் ஆகிவிடுவாலோ// அந்த விரைவு 3 வருடங்களாகவும் இருக்கலாம்.

ஆகவில்லை என்று பயப்படுற பெற்ரோர் கூட இருக்காங்க. இதுல யோசிக்க ஒன்றும் இல்லை.

//பயமாக‌ இருக்கிறது.// ஏன்ங்க!! இது சாதாரணமான விடயம்தானே! இதுல பயப்பிட என்ன இருக்கு!! பெரியவளாகினானும், அடுத்த மாதம் முதல் ஒழுங்காக மாதாமாதம் இரத்தப்போக்கு இராது. இருந்தாலும்... இப்போது பாதுகாப்பான சானிடரி தயாரிப்புகள் உள்ளன. நீங்க பொண்ணை பயமுறுத்தாம... சோகமாக் காட்டிக்காம பாஸிடிவ்வா பேசினா போதும். இல்லாம இங்க பேசினது போல பேசினீங்கன்னா, குழந்தையும் இதைப் பெரிய நோய் போல எடுத்துக் கொள்ளும்.

வளர்ச்சி அதன் பாட்டில் இருக்கட்டும். குழந்தையின் விளையாட்டுகள் அதன் போக்கில் போகட்டும். எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அம்மா உங்கள் கடமை. பெரியவளானால் மட்டும்தான் என்றில்லை. எப்பொழுதும், ஆண் குழந்தையானாலும் கூட கண்காணிப்பாக இருக்க வேண்டிய காலம் இது. இதைப் பெரிசுபடுத்தாதீங்க.

//சின்ன‌ குழந்தை,// நீங்க இப்பிடி சொல்லிக் கெடுக்காதீங்க. ஒவ்வொரு குழந்தைக்கு மனமுதிர்ச்சி ஒவ்வொரு சமயம் ஆகும். அவங்களுக்கே இதுபற்றியெல்லாம் ஓரளவு அறிவு இருக்கும். உங்கள்ட்டதான் பேச மாட்டாங்க. :-)

//மெலிந்த‌ உடல் வாகுதான்.// அதற்கும் இதற்கும் என்ன இருக்கிறது!! அளவைப் பற்றி யோசித்தது பழைய காலம். இப்ப நீங்க கலியாணம் கட்டிக் கொடுக்க மாட்டீங்க; அவங்க குழந்தை பெற்றுக்கப் போறது இல்லை. அவங்களை இயல்பாக வளர விடுங்க.

மாதவிலக்கு ஆரம்பித்தால் செய்ய வேண்டியது இழக்கும் இரத்ததிற்கு ஈடு கட்டுவது போல ஆரோக்கியமான உணவு உண்ணக் கொடுங்கள். பச்சைக்கீரைகள், ரெட் மீட் (அல்லது மீன்) கொடுங்கள். இது கூட, ஆரம்பத்தில் சில மாதங்களுக்கு வேண்டுமானால் நினைவாகச் செய்வீர்கள். பிறகு... எல்லா மாற்றங்களுக்கும் உடம்பு பழகிக் கொள்ளும். விளையாட்டுகள் எதையும் குறைக்காதீர்கள். மேலதிக ஓய்வு எல்லாம் தேவையில்லை. இயல்பாக இருக்க விடுங்க. எங்கு போனாலும் கையில் தயாராக தேவையானதைக் கொண்டு போக வைத்தால் போதும்.

இப்போ நீங்க யோசிக்கிறதால எதையாவது பின்போட முடியுமா? இல்லை இல்ல!!

//சில‌ வறுடமாக பிராய்லர் கோழியோ, முட்டையோ கூட‌ குடுப்பதில்லை.// ;) சைவம் மட்டும் சாப்பிடுறவங்களாக இருந்தாலும் கூட இதையெல்லாம் மாற்ற முடியாது. பெண்கள் பெண்கள்தான்.

~~~~
இருந்தாலும் இதுதான் என்று இருக்காமல் ஒரு தடவை காட்டிட்டு வாங்க. பிறகு விட்டுரலாம்.

‍- இமா க்றிஸ்

நான் என் மகள்கிட்ட‌ விளையாட்டா தான் எதையும் சொல்வேன், அதே நேரம் அவளிடம் இது எல்லா கியேல்ஸ் கும் வளருகிறப்ப‌ இருகுறது தான் மா நு தான் சொல்லிருக்கேன். ஆனால் வெள்ளையில்லாமல் சிவப்பு நிறத்தில் வந்தால் என் கிட்ட‌ சொல்லனும் பயபடகூடது அப்டினும் ஜாலியாக‌ தான் சொல்லி வைத்திருக்கிறேன்.
என் பயம் வேர‌ எதுவாகவும்(கிருமி தொற்று) இருந்து அதை நாம் அசட்டை செய்து விட‌ கூடதே என்பதற்கும், நிதமும் இப்படி இருப்பதால் உடல் சோர்வு ஏற்பட்டு விட‌ கூடாதே என்பதற்கும் தான். அது மட்டும் அல்லாது அவள் பெரியவல் ஆனால் அது கடவுளின் நற்கிருபை என்றே என்னுவேன். ஆனாலும் 5 படிக்கும் குழந்தை அவள் இப்பவே அச்சிரமம் வேண்டுமா என்று தான் சிறு அச்சம். ஒரு 7 வது படித்தால் நாம் அவளுக்கு சொல்லித்தருவதை நன்கு புரிந்து கொள்வாளே என்று தான்.
\\இருந்தாலும் இதுதான் என்று இருக்காமல் ஒரு தடவை காட்டிட்டு வாங்க// டாக்டரிடம் காட்ட‌ சொல்றீங்களா?

கண்டிப்பா டாக்டரிடம் கன்சல்ட் பன்னிகுறேன். நன்றி.

//கிருமி தொற்று// இராது என்றுதான் தோன்றுகிறது. நிறம், வாடை, அரிப்பு, அடி வயிற்றில் வலி - இப்படி எதுவும் இருப்பதாக நீங்கள் சொல்லவில்லை.

//நிதமும் இப்படி இருப்பதால் உடல் சோர்வு ஏற்பட்டு விட‌ கூடாதே// வளர்ச்சி தொடர்பான விடயமாக இருந்தால், இதனால் சோர்வு வராது.

//5 படிக்கும் குழந்தை அவள் இப்பவே அச்சிரமம் வேண்டுமா// :-) சிரமம் என்று எண்ணாதைங்க. அப்படிக் குழந்தை முன் பேசாதீங்க. உங்களைப் போல் உங்கள் குழந்தையும் இதைச் சிரமம் என்றேதான் நினைக்கும். இது இயற்கை. எல்லோருக்கும் சிரமம் இருப்பதில்லையே! எல்லோரும் அந்த நாட்கள் சிரமம், வலிக்கிறது, முடியவில்லை என்று பாடசாலைக்குப் போகாமல் வீட்டிலா இருந்தோம்! உங்கள் குழந்தைக்கும் வலி இல்லாத, சிரமம் இல்லாத விடயமாக மாதவிலக்கு அமையலாம். ஆனால் இந்த எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதுவேதான் குழந்தைக்கும் வரும். //பெரியவளாகினானும், அடுத்த மாதம் முதல் ஒழுங்காக மாதாமாதம் இரத்தப்போக்கு இராது.// என்பதையும் முன்பே குறிப்பிட்டிருந்தேன்.

//என்று தான் சிறு அச்சம்.// இதில் அஞ்ச என்ன இருக்கிறது! //ஒரு 7 வது படித்தால் நாம் அவளுக்கு சொல்லித்தருவதை நன்கு புரிந்து கொள்வாளே என்று தான்.// இப்போ உங்கள் குழந்தை நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ளவில்லையா! ஒன்பது வயது, புரிந்துகொள்ளக் கூடிய வயதுதான். ஆனால் இப்போதுதான் எதுவும் ஆகவே இல்லையே! அதனால் நான் உங்களோடு இதைப் பற்றிப் பேசிக் குழப்பக் கூடாது. :-) அமைதியாக இருங்கள். மாற்றங்கள் சட்டென்று ஓரிரு மாதங்களில் வருவது இல்லை. வளர்ச்சி மெதுவாகத்தான் இருக்கும். நீங்கள் விரும்புவது போல இன்னும் சில வருடங்கள் கழித்துத்தான் பெரியபெண் ஆகுவார்.

\\இருந்தாலும் இதுதான் என்று இருக்காமல் ஒரு தடவை காட்டிட்டு வாங்க டாக்டரிடம் காட்ட‌ சொல்றீங்களா?// ஆம். //நாம் அசட்டை செய்து விட‌ கூடதே என்பதற்கும்,// அதனால்தான் சொன்னேன் சகோதரி. மார்பு வலி பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். இன்று உள்ள காலம் எதையும் இப்படித்தான் இருக்கும் என்று விட்டுவிட முடியாத காலமாக இருக்கிறது இல்லையா! முன்னெச்சரிக்கை நல்லதுதானே!

இந்த இழையின் தலைப்பு, //பெண் குழந்தைகளின் உடல் வளர்ச்சி மாற்றம் பற்றி கூறவும்.// என்று இருக்கிறது. என் பதிலில் சில வரிகள் தவிர மீதியெல்லாம் பொதுவாக, 'பெண் குழந்தைகளின் உடல் வளர்ச்சி மாற்றம்' என்பதை மனதில் கொண்டு, வேறு சகோதரிகளையும் சிந்திக்க வைக்கும் நோக்கில் எழுதியவை. சகோதரி அனைத்துக் கருத்துகளையும் உங்களை நோக்கிச் சொன்னதாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

‍- இமா க்றிஸ்

நான் இந்த‌ கேள்விக்கு இப்படி தலைப்பிட்ட‌ காரனமே என்னை போல் எல்லாரும் தெரிந்து கொள்ள‌ பயன் உள்ளதாக அமையட்டுமே என்று தான். அந்த‌ கால‌ கூட்டுக்குடும்ப‌ வாழ்க்கை என்றால் இந்த‌ சந்தேகங்கள் உடனடி தீர்த்துக்கொள்ள‌ நிறைய‌ பெரியவர்களின் பதில்களும் தேற்றுதல்களும் இருக்கும். நீங்கள் எனக்காகவே அனைத்தையும் கூறி இருந்தாலும் நான் நன்மையாகவே எடுத்துக்கொள்வேன்,:‍)) மிக்க‌ நன்றி அக்கா.

Gud post.. Mob..so English.. Sorry

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

மேலும் சில பதிவுகள்