ஆர்கமி பாக்ஸ் (Origami box)

ஆர்கமி பாக்ஸ் Origami box

தேதி: August 3, 2015

4
Average: 3.6 (8 votes)

 

சதுரத் தாள்கள்
கத்தரிக்கோல்
க்ளூ
மெட்டல் ஸ்கேல்
க்ராஃப்ட் நைஃப்
பேபி ரிப்பன்
கற்கள்

 

சதுரமான பேப்பர் ஒன்றை அதன் ஒரு மூலைவிட்டத்தின் வழியே மடிக்கவும்.
பேப்பர் மடிப்பு
மடிப்பைப் பிரித்து, அடுத்த மூலைவிட்டத்தின் வழியாக மீண்டும் மடிக்கவும்.
பேப்பர் மடிப்பு
படத்தில் காட்டியபடி இரண்டு எதிர் முனைகளையும் நடுப் புள்ளியுடன் இணைத்து மடிக்கவும்.
பேப்பர் மடிப்பு
கிடைக்கும் வெளி மடிப்புகளை நடுக் கோட்டுக்குக் கொண்டு வந்து மடிக்கவும்.
பேப்பர் மடிப்பு
கடதாசியை விரித்தால், இங்கு காட்டியுள்ள இடங்களில் மடிப்புகள் இருக்கும்.
பேப்பர் மடிப்பு
இப்போது மற்ற இரண்டு முனைகளையும் முன்பு மடித்தது போல மடித்து எடுக்கவும்.
பேப்பர் மடிப்பு
இப்போது கடதாசியை விரித்தால் இப்படித் தெரியும்.
பேப்பர் விரிப்பு
தடித்த கோடுகள் தெரியும் இடங்களில் வெட்டிக் கொள்ளவும்.
பேப்பர் வெட்டுதல்
வெட்டிய கோட்டிற்கு அடுத்து உள்ள சிறிய கோட்டின் வழியே மடித்து முக்கோணத்தை நடுவில் ஒட்டிக் கொள்ளவும். இதே போல எதிர்ப்புறமும் மடித்து ஒட்டவும்.
பேப்பர் மடித்தல்
காட்டியுள்ள மடிப்புகள் நான்கையும் ஒரு தடவை அழுத்தி மடித்து விடவும்.
பேப்பர் மடித்தல்
மடித்த துண்டுகளை நிமிர்த்தி, படத்தில் காட்டியிருப்பது போல பிடித்து ஒட்டிவிடவும்.
பேப்பர் மடித்து ஒட்டுதல்
ஒரு பக்கத்தில் இருக்கும் துண்டை மடித்திருக்கும் பக்கத்தின் மேலாக எடுத்து உள்ளே மடிப்பின் வழியாக அழுத்திக் கொள்ளவும். நடுச் சதுரத்தின் மூன்றாவது துண்டை ஒட்டிவிடவும்.
பேப்பர் மடித்து ஒட்டுதல்
இறுதியாக மீந்து இருக்கும் பக்கத்தையும் இதே போல மடித்து ஒட்டவும்.
பேப்பர் பாக்ஸ்
பெட்டி தயார்.
பேப்பர் பாக்ஸ்
இதற்கு சின்னதாக கைப்பிடி போல ஒட்டிவிட்டால் சிறியதொரு கூடை கிடைக்கும்.
பேப்பர் பாக்ஸ்
மூடியுடனான பெட்டி செய்ய : ஒரே அளவான இரண்டு சதுரக் கடதாசிகளை எடுத்துக் கொள்ளவும். ஒன்றை மூலை விட்டத்தின் வழியாக நான்காக மடித்து, திறந்திருக்கும் பக்கத்திலிருந்து ஒரு மில்லிமீட்டர் அளவான நேர்த் தீரையொன்றை வெட்டி நீக்கவும். பின்பு மேலே சொன்ன விதமாக இரண்டு சதுரங்களையும் மடித்து ஒட்டிக் கொள்ளவும்.
பேப்பர் பாக்ஸ்
ஒன்றுக்குள் ஒன்று சொருக்கக் கூடிய விதத்தில், ஒன்று மற்றதை விட சற்றுச் சிறியதாக இருக்கும்.
பேப்பர் பாக்ஸ்
மூடியில், வடிவில் மடிப்புகள் தெரியும். அந்தக் கோடுகளின் மேல் சிறிது க்ளூ வைத்து பேபி ரிப்பனை ஒட்டி ரிப்பனின் ஓரங்களை உள்ளே மடித்து ஒட்டிவிடவும். கற்களை விரும்பிய விதமாக ஒட்டி அலங்கரிக்கவும்.
ஆர்கமி பாக்ஸ் Origami box

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வெகு அருமை. நான் செய்து பார்க்க‌ போறேன்.
நன்றி இமா.

அன்புடன்
ஜெயா

:-) நன்றி. அருமை எல்லாம் இல்லை. இது ஸ்கூல்ல சின்னவங்க செய்றது. எனக்குப் பொழுது போகல. ஒரு இரவு நேரம் செய்தேன். ஃபோட்டோ கூட மங்கலாத்தான் வந்து இருக்கு. :-)

செய்து பாருங்க. சுலபம். பெட்டிகள் செய்து முடிந்த பின் உள்ளே அட்டை வைத்தால் உறுதியாக நிற்கும்.

‍- இமா க்றிஸ்

super