கூம்பனி

கூம்பனி என்பது என்ன? தெரிந்தவர்கள் விளக்கவும்.

அன்புடன்
ஜெயா

-

எத்தனை தடவை சொன்னாலும் இந்த ஒரு விஷயத்தை சிலர் கவனத்தில் எடுக்கவே மாட்டேன் என்கிறீங்க. ;((

கேள்வி கேட்டவங்களுக்கு உதவ நினைக்கிறது வேறு; இது வேறு. ;((

உங்கள் சொந்த வார்த்தையில் திரும்ப டைப் செய்திருக்கலாமே சகோதரி!

‍- இமா க்றிஸ்

i am working in home.So net la search panni thedi eduthu paste pannen.helpful ah irukum nu ninachu than.Tamil la type panna romba time edukuthu athan.i m working woman thats y

:-) நீங்கள் என்னிடம் சாரி கேட்க வேண்டியது இல்லை சத்யா. :-) எனக்கு எதுவும் இல்லை. வேறு தளங்களிலிருந்து காப்பி பேஸ்ட் செய்யக் கூடாது என்பது அறுசுவை விதி. தொடர்ந்து போட்டால் உங்களுக்குத் தான் சிக்கல். :-) இனிமேல் காப்பி பேஸ்ட் போடாதீங்க.

‍- இமா க்றிஸ்

ok imma ma.inimel nane type pantren

பதனீர் காய்ச்சும் போது கருப்பட்டி பக்குவத்துக்கு முன்பு வரும் கெட்டிப்பாகு நிலையை கூப்பனி நு சொல்லுவாங்க‌.
அதைத் தான் சொல்லுறீங்கன்னு நினைக்கேன்.:)

அதைத் தான் சொல்லுறாங்க. தேடிப் பார்த்தேன். அதைக் கூழ்ப் பதநீர் என்பார்களாம். அது மருவி... கூம்பனி / கூப்பனி ஆகி இருக்கிறது. இன்று புதிதாக ஒன்று கற்றிருக்கிறேன். :-) சரியான சொல்லை எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி நிகி.

‍- இமா க்றிஸ்

கூப்பனியைத்தான் கூம்பனி என்று தெரியாமல் சொல்லிவிட்டேன். ஆனாலும் சரிசெய்து பதிலளித்த‌ சகோதரிகளுக்கு நன்றி. இந்த‌ வார்த்தையை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். தெரிந்துகொள்ளவே கேட்டேன். புதிதாக‌ நிறைய‌ தெரிந்துகொண்டேன்.

எத்தனைபெயர்கள் - ‍பனஞ்சாறு (பாண்டிச்சேரியில்) \ அக்கானி (நாகர்கோயிலில்) \ பைனி (நாகர்கோயிலில் \ பதனீர் (சென்னையில்).

மேலும் சில பதிவுகள்