தேதி: August 5, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கேழ்வரகு மாவு - 200 கிராம்
உளுத்தம் பருப்பு - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உளுத்தம் பருப்புடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

பருப்பு ஊறியதும் எடுத்து களைந்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

அதில் கேழ்வரகு மாவை சேர்த்து உப்பு போட்டு கலந்து வைக்கவும்.

கலந்து வைத்த மாவை ஐந்து மணி நேரம் வைத்திருக்கவும். மாவு பொங்கி வந்திருக்கும்.

தோசைக்கல்லில் நல்லெண்ணெய் தடவி மெல்லிய தோசையாக வார்க்கவும்.

இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும். தேங்காய் சட்னி, கார சட்னியுடன் பரிமாறவும்.

Comments
நிகி
நிகி... கலக்கல் :) சூப்பர்... வருசைய இந்த வீக் சத்தான உணவா?? நன்றி நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
டீம்
என்னோட குறிப்பை அழகா எடிட் பணி உடனே வெளியிட்டமைக்கு நன்றி.
சத்துணவு
அன்பு வனி
பேரு தான் சிறுதானியம். சத்தோ ரொம்ப பெருசு தான்.
இன்னும் வரகு பெசரெட்டு அனுப்பி இருக்கேன் வனி.
நம்ம டீமுக்கு தான் எடிட்டிங் இருக்கும்னு நினைக்கேன்.
உங்களோட பதிவு ஊக்கமூட்டுவதாக உள்ளது. நன்றி வனி:))
இன்று தான் தினையரிசி வாங்கிட்டு வந்திருக்கேன். அடுத்த வாரம் தினைப் பணியாரம் அனுப்புகிறேன்......
niki
Super Niki. Innum nerya ethir parkirom .
Be simple be sample
அன்பு ரேவா
நன்றி.
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சி செய்கிறேன். நீங்களும் கொஞ்சம் ஒத்துழைப்பு தருவீங்கல்ல :)