சோள அடை

தேதி: August 10, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சோளம் - அரை டம்ளர்
கடலைப்பருப்பு - கால் டம்ளர்
துவரம்பருப்பு - கால் டம்ளர்
உளுந்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறு துண்டு
மிளகாய் வற்றல் - 5
பெரிய வெங்காயம் (பல்லாரி) - ஒன்று
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை
உப்பு
நல்லெண்ணெய்


 

சோளம் மற்றும் பருப்பு வகைகளை மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிக்ஸியில் ஊற வைத்தவற்றை தண்ணீர் வடித்து போட்டு மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்
அரைத்த மாவுடன் சீரகம், மஞ்சள் தூள், நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
கரைத்து வைத்திருக்கும் மாவை மெல்லிய அடைகளாக வார்க்கவும்.
மேலே எண்ணெய் விட்டு புரட்டி வெந்ததும் எடுக்கவும்.
சுவையான சோள அடை ரெடி.

அடைக்கு அவியல் பொருத்தமாக இருக்கும். வெண்ணெயும் வெல்லமும் சேர்த்து சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Super :) sikiram ellaam seydhu paarkaraen.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சோள அடை டிப்ஸ் ஈஸி அன்ட் சூப்பர்,
இன்னும் நல்ல நல்ல டிப்ஸ் கொடுக்க வாழ்த்துக்கள்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

நன்றி.:)அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க‌:)

எளிமையான‌ குறிப்புகளையே தந்திருக்கிறேன்.
சுபி செய்து பார்க்க‌ வசதியாக‌ இருக்கணுமே:))