வாழைக்காய் சிப்ஸ்

தேதி: February 14, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நேந்திர வாழைக்காய் - 2
மிளகாய்தூள் - 2 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்
உப்பு - 2 தேக்கரண்டி


 

மிளகாய்தூள், மிளகுத்தூள், உப்பு மூன்றையும் கலந்து வைக்கவும். வாழைக்காயை தோல் சீவி, வட்ட வட்ட ஸ்லைஸ்களாக நறுக்கி ஒரு தேக்கரண்டி உப்பு கலந்த தண்ணீரில் உடனே போட்டு வைக்கவும்.
இன்னொரு தேக்கரண்டி உப்பை சுமார் 3/4 லிட்டர் தண்ணீரில் கலந்து அடுப்பில் வைத்து சூடானதும், ஸ்லைஸ்களை எடுத்து அதில் சுமார் 2 நிமிடங்கள் மட்டும் போட்டு நீரை நன்கு வடித்து ஒரு துணியில் பரப்பி வெயிலில் காயவிடவும்.
நன்கு காய்ந்ததும் எடுத்து எண்ணெயில் விட்டு பொரித்து, எண்ணெய் வடிந்தவுடன், ஆனால் சூடாக இருக்கும்போதே உப்பு கலந்த தூள் வகைகளை தூவி சாப்பிடலாம்.


அதிகமாக செய்துவைத்துக்கொண்டால் தேவைப்படும் போது பொரித்துக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்