தேதி: August 13, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
திருமதி. ஸ்ரீலதா அவர்களின் குறிப்பினை பார்த்து செய்தது.
கோதுமை மாவு - ஒரு கப்
வெங்காயம் - 3 (பெரியது)
பூண்டு - 10 பல்
மிளகாய் பொடி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

வெங்காயம் மற்றும் பூண்டினை தோலுரித்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கோதுமை மாவை நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் மிளகாய்ப் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.

பிறகு அதனுடன் நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கவும்.

எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

மாவை சிறிய எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து அப்பளம் வடிவில் செய்துக் கொள்ளவும்.

தயாரான மசாலா கலவையை ஒவ்வொரு அப்பளங்களிலும் வைத்து ரோல் செய்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரோல் செய்தவற்றை பொரித்து எடுக்கவும்.

சுலபமாக செய்யக்கூடிய சுவையான கோதுமை ரோல் தயார். கெட்சப்புடன் பரிமாறவும்.

Comments
கோதுமை ரோல்
உண்மையாகவே சுலபமாத்தான் இருக்கு. அழகாக செய்து காட்டியிருக்கிறீங்க சுமி.
- இமா க்றிஸ்
sumi
சூப்பரா செய்து இருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு. சிம்பிளாவும் இருக்கு. செய்து பார்க்கிறேன்.
எல்லாம் சில காலம்.....
Ha......
Godhumai roll na ve2la senji pathen nalla taste'a irundhathu, romba thanks aunty......
quick and tasty
ரொம்ப நல்லாயிருக்கு. சீக்கிரம் பன்னிடலாம். மிக்க நன்ரி
eat for good health