please urgent

அன்பு தோழிகளே,
அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
என் பையனுக்கு 6 வயது ஆகுது, அவனுக்கு லைட்டா வீசிங் தொந்தரவு இருக்கு, அவனுக்கு சளி இருந்துகிட்டே இருக்கு.மருந்து குடுத்த அப்போ சரியாகி விடுது. அப்புறம் மீண்டும் சளி பிடித்துகொள்கிறது. எனக்கு இங்கிலிஷ் மெடிசன் குடுக்க விருப்பம் இல்லை. வீட்டு வைத்தியம் சொல்லுங்க ப்ளிஸ்.

முதலில் வீஸிங் வருவதற்கான காரணத்தைக் கண்டுபிடியுங்கள்.
//மருந்து குடுத்த அப்போ சரியாகி விடுது.// என்ன மருந்து கொடுத்தீ(தா)ங்க. இந்த இரண்டையும் சொன்னால் //வீட்டு வைத்தியம்// சொல்லலாம்.

‍- இமா க்றிஸ்

http://www.arusuvai.com/tamil/node/20799
http://www.arusuvai.com/tamil/node/7803?page=3
http://www.arusuvai.com/tamil/node/29784
http://www.arusuvai.com/tamil/node/18457
http://www.arusuvai.com/tamil/node/16438

‍- இமா க்றிஸ்

இமா,
ஒவ்வொரு தடவை போகும் போதும் வேறு வேறு மருந்து கொடுக்குறங்க. நான் வேலைக்கு போறேன். அதனால் இப்போது சொல்ல முடியவில்லை. ஆனால் நான் ரெகுலராக ஒரே டாக்டர் கிட்ட தான் பாக்கிறேன். குழந்தை பார்க்கும் டாக்டர் தான். கீழ்பாக்கம் மருத்துவமனையில் ப்ரொப்சர். அவர் அது 10 வயது மேல சரியாகிவிடும் சொல்றார். என் ஹஸ் கூட இந்த மாதிரி இருந்தது இப்போது இல்லை,

Cold ku medicine kudukathinga ..
entha medicine um cold cure panathu..
nenga ipdu medicine kudithite irunthingana unga payanuku immunisation epdi varum solunga..
cold vantha periyavanga namake cure aha 1 week ahum minimum.. Athu automatic ah sari ayrum... So medicine adikadi kudukathinga... ROMba mudilana kudunga... Suma suma kuduthingana athu nalathu kidayathu..

cold medicine la aspirin serthurupanga... Aprm thokam varathuku etahathu kalanthrupanga... Tamil medicine thoothuvalai, kandankathari, tulsi, manjal ellam,arachu kudunga ... Sari ayrum..

நன்றி ஜெனி,

அன்புள்ள‌ அம்மையீர்,
உணவில் பப்பாளியை பழமாக‌, ஜாமாக‌ சேர்க்கவும்.
காயாக‌ இருக்கும் பப்பாளியை உள்ளே உள்ள‌ வெள்ளைப் படலத்தையும், மேல்
தோலையும் எடுத்து விட்டு சாம்பார், கூட்டு, காரக்குழம்பு,குருமா என்று வகை
வகையாகச் செய்து கொடுங்கள், செங்காயாகக் கிடைத்தால் பறங்கிக்காய் போல‌
தேங்காய் துருவிப் போட்டு காரம் குறைத்து பொரியல் போல் செய்து கொடுங்கள்
மற்ற‌ காய்களோடும் கலந்து சமைத்துக் கொடுங்கள். ஆஸ்த்துமாவே குணமாகும்
செங்காயாக‌ உள்ள‌ போது எது செய்தாலும் பறங்கிக்காய் போல் தித்திக்கும்.
காயாகப் பயன்படுத்தினால் தோலை எடுத்து விட்டு மூன்று முறையாவது நன்கு
கழுவ‌ வேண்டும். அப்போது தான் பால் வாசம் போகும். தொடர்ந்து வாரம்
மூன்று முறையாவது கொடுங்கள். அதிகமாக‌ மூன்று மாதத்தில் குணமாகும்.
பப்பாளியைக் கழுவிய‌ தண்ணீரை வீட்டில் செடி வைத்திருந்தால் அவற்றை
இந்தத் தண்ணீரால் நன்கு நனையுங்கள். பூச்சிகள் சாகும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது பா.12 வயதில் அதுவே சரியாகி விட்டது.குழந்தைக்கு குளிர்ச்சியான பொருள் எதுவும் தராதீங்க

ஏமாறாதே|ஏமாற்றாதே

நன்றி,
பிரியா, பூங்கோதை அம்மா,
அம்மா உங்கள் பதிலை தான் எதிர் பார்த்து கொண்டிருந்தேன்.உங்கலுடைய குறிப்புகள் எல்லாம் நல்ல இருக்கும். குழந்தை பாப்பாளி எல்லாம் சாப்பிட மாட்டான். மீறி குடுத்தா வாமிட் பண்ணுவான். தயவு பண்ணி வேறு ஏதாவது சொல்லுங்க

உங்கள் பேர் தெரியாததால் பெயரைக் குறிப்பிட‌ முடியவில்லை.
சிலருக்கு பப்பாளியின் வாசம் பிடிக்காது. காயாகச் சமைத்தால் வேறு காய்களோடு சேர்த்து மசாலா பிடித்தால் சேர்த்து செய்து கொடுங்கள்.
பொதுவாக‌ அசைவம் உண்பவர்கள் விரைவாக‌ வேகவைக்க‌ இதைச் சேர்த்து சமைப்பார்கள். ஜாமாக‌ வேறு பழங்களோடு வேறு எஸ்ஸன்ஸ் சேர்த்து செய்யுங்கள். வேறு காய்கறிகளோடு உருவமே தெரியாமல் பொடியாக‌ சீவி சூப்
ஆகக் கொடுங்கள். அன்னாசி எசன்ஸ் சிவப்பு கலர், கேசரி கலர்(அன்னாசிப்
பழத்தோடு 3=1 அல்லது பாதி பாதி கலந்து பேரைச் சொல்லாமல் கொடுங்கள்.
மொத்தத்தில் உருவம் தெரியாமல் வேறு வாசத்தில்(சாம்பார்,சூப்,கூட்டு
பெரிய‌ துண்டுகளாகப்போட்டு வெந்த‌ பின் எடுத்து காயை நீங்கள் சாப்பிடுங்கள்.
சாற்றை பையனுக்குக் கொடுங்கள். பப்பாளி சளி பிடிப்பதற்கு அடிப்படையான‌
குறைகளை நீக்கி விடும். மருந்து என்று ஒன்றைத் தனியாகத் தருவதைவிட‌
உணவே மருந்தாகும். பப்பாளியை நான் சொன்ன‌ மாதிரி காயானால் உள்ளே வெளியே இரண்டு தோலையும் சீவி எடுத்து மூன்று முறை கழுவுங்கள்.ஒரு
பிசுபிசுப்புத் தன்மை உண்டு ஒரு கால் மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து தண்ணீரை வடித்து விட்டு சமையுங்கள். வரும் இரண்டு நாள்களில் முயன்று பாருங்கள்.திங்கள் கிழமை பதிலை எதிபார்க்கிறேன்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

உங்கள் குழந்தைக்கு டான்ஸில்ஸ் பிரச்சினை ஏற்பட்டுள்ள‌து என்று நினைக்கிறேன். அடினாய்டுகள் விரிவடைந்து டான்ஸிலில் வீக்கம் ஏற்படும்போது குழந்தைகளுக்கு இந்த மாதிரி பிரச்சினைகள் ஏற்படும். சற்று அதிகமாக இருந்தால் காய்ச்சலும் உண்டாகும். சில சமயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். இதன் முக்கிய காரணம் ஏஸி போடப்பட்ட அறையில் படுத்துறங்குவது தான். கூடுமானவரை குழந்தை உறங்கும்போது அதிகம் ஏசி உபயோகப்படுத்துவதைத் தவிர்த்து ஜன்னல் கதவுகளை நன்கு திறந்து வையுங்கள். குழந்தைக்கு பிரச்சினைகள் நிறையவே குறையும். இந்த இணைப்பும் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

http://www.arusuvai.com/tamil/node/24980

மேலும் சில பதிவுகள்