வெண்டைக்காய் கார குழம்பு

தேதி: August 17, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (6 votes)

 

வெண்டைக்காய்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு
புளி தண்ணீர் - கால் கப்
தாளிக்க:
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு
கறிவேப்பிலை, கொத்தமல்லி


 

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும். அதில் வெங்காயம், வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயத்தின் நிறம் மாறி, வெண்டைக்காயும் பாதி வெந்ததும், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். (விரும்பினால் தக்காளியை அரைத்தும் சேர்க்கலாம்)
தக்காளி வெந்து எண்ணெய் பிரியும் போது, தூள் வகைகள் எல்லாவற்றையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தூளின் வாசம் குறைந்து காய் வெந்ததும், புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான வெண்டைக்காய் கார குழம்பு தயார்.

வனிதா அவர்களின் குறிப்பினை பார்த்து செய்தது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்