மொச்சைக்கொட்டை ஸ்நேக்ஸ்

தேதி: February 14, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெள்ளை மொச்சைக்கொட்டை - ஒரு கப்
முந்திரிப்பருப்பு - 10
மிளகாய்தூள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

மொச்சையை ஒருநாள் முன்பே ஊறவைத்து, மறுநாள் தோலுரித்து சுத்தமான துணியில் போட்டு ஒத்தியெடுக்கவும்.
முந்திரிப்பருப்பை பொடியாக உடைத்துக்கொண்டு, அதை முறுகிவிடாத அளவுக்கு எண்ணெயில் வறுத்து, ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெயை ஒத்தியெடுத்து ஒரு பாக்ஸில் போட்டு மூடாமல் வைக்கவும்.
ஊறி உலர்ந்த மொச்சையையும் நிதானமான சூட்டில் எண்ணெயில் முறுகிவிடாமல் வறுத்து, அதேபோல் டிஷ்யூ பேப்பரில் ஒத்தியெடுத்து அதே பாக்ஸில் போட்டு சூடு ஆறுவதற்குள் மிளகாய்தூள், உப்பு போட்டு நன்கு குலுக்கிவிட்டு, சூடு நன்கு ஆறும்வரை திறந்து வைத்து, பிறகு இறுக்கமாக மூடிவைத்தால், 10 அல்லது 15 நாட்கள் வரை பொரபொரப்பாக இருக்கும்.
இது புரோட்டீன் சத்து நிறைந்தது.


மேலும் சில குறிப்புகள்


Comments

அஸ்மா நேற்று இந்த ஸ்னாக்ஸ் செய்தேன் ரொம்ப நன்றாக இருந்தது

நன்றி விஜி! பிறகு பேசுவோம், ஓ.கே.? :)

அஸ்மா என்ன ஊருக்கு ரெடி ஆயாச்சா?
ஜூட் ரெடி 1,2, 3
ஜலீலா

Jaleelakamal

பயணத்திற்கு ரெடியா ஆயிட்டே இருக்கேன், ஜலீலாக்கா! கையும் காலும் பம்பரமா சுத்திக்கிட்டே இருக்கு. உங்க மெயில் பார்த்தேன், சூப்பர் :)