நவதானிய காய் பக்கோடா

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சத்துமாவு - 2 கப்
காய்கறி - கால் கிலோ
கரம் மசாலா பவுடர் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு


 

கம்பு, கேழ்வரகு, முழுபாசிப்பயிறு, கொண்டைக்கடலை, சோளம், கோதுமை, புழுங்கல் அரிசி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை வாங்கி கல் நீக்கி, கழுவி தனித்தனியாக காய வைத்து தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்.
பொட்டுக்கடலை, வேர்க்கடலையை கழுவி காய வைக்கத் தேவையில்லை.
இவையனைத்தையும் மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொண்டு சலித்து ஒரு டப்பாவில் கொட்டி வைக்கவும். இதுவே சத்து மாவு.
தேவையான போது எடுத்து அளவாக கல் உப்புத் தூள், கரம் மசாலாத்தூள் போட்டு கலந்து கொள்ளவும்.
காய்கறிகளுக்கு நாட்டுக்காய்கறிகளான கத்திரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், செளசெள, பீர்க்கங்காய், புடலங்காய் இப்படி வாங்கிக் கொள்ளவும்.
அல்லது காரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பீட்ருட், நூல் கோல், குடைமிளகாய், காலிஃபிளவர் இப்படியும் இருக்கலாம்.
இங்கிலீஷ் காய்கறி அல்லது நாட்டுக் காய்கறிகள் மட்டும் வாங்கவும். இரண்டையும் கலந்து விட வேண்டாம்.
காய்கறிகளை கால் கிலோ எடுத்து பொடியாக நறுக்கி விட்டு கழுவி இட்லி தட்டு அல்லது குக்கரிலோ ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
அதை மாவில் கொட்டி அத்துடன் ஒரு பெரிய வெங்காயம் பொடியாக வெட்டிப் போட்டு, மல்லித்தழை, கறிவேப்பிலைக் கொத்து கிள்ளிப் போட்டு வெந்த காய்கறிகளை எல்லாம் போட்டு கலந்து பிசைந்து வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அரை லிட்டர் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது மாவை எடுத்து பரவலாக பிசிறி விடவும்.
அல்லது சிறு சிறு உருண்டைகளாகச் செய்து போட்டு பொன்னிறமாக சிவந்து வெந்ததும் எடுத்து விடவும்.
மொறுமொறுப்பாக வேண்டும் என்றால் சிவக்க விட்டு எடுக்கவும்.
இதற்குத் தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை.
புதினா சட்னிதேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். கடைகளில் விற்கும் சத்துமாவு வாங்கியும் அதற்குத் தகுந்தாற் போல் காய்கறி, உப்பு சேர்த்து பிசைந்தும் செய்யலாம்.


மேலும் சில குறிப்புகள்