மைக்ரோவேவ் க்ரில்டு ஃபிஷ்

தேதி: August 21, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

வனிதா அவர்களின் குறிப்பினை பார்த்து முயற்சி செய்த குறிப்பு இது.

 

மீன் - 500 கிராம்
மிளகு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மல்லித் தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை - ஒன்று


 

மீனை சுத்தம் செய்து மேலே கத்தியால் கீறி வைக்கவும்.
மிளகை பொடி செய்து எடுத்துக் கொண்டு, மற்ற தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து எலுமிச்சை சாறு கலந்து வைக்கவும்.
இதை மீனின் மேல் தடவி (கீறிய இடத்தில் நன்றாக உள்ளே படும்படி பூச வேண்டும்) 4 மணி நேரம் மூடி போட்ட பாத்திரத்தில் ஃபிரிஜ்ஜில் வைக்கவும்.
ப்ரிஜ்ஜிலிருந்து எடுத்து சிறிது நேரம் கழித்து மைக்ரோவேவில் க்ரில்லில் வைத்து 10 நிமிடம் இடையில் ஒரு முறை திருப்பி விட்டு க்ரில் செய்து எடுக்கவும்.
சுவையான மைக்ரோவேவ் க்ரில்டு பிஷ் ரெடி.

இதில் மிளகாய்த் தூள், மல்லித் தூள் கட்டாயம் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. விரும்பினால் அதற்கு பதிலாக மிளகே மேலும் சிறிது சேர்த்துக் கொள்ளலாம். மிளகு தூளுக்கு பதிலாக ஃப்ரெஷ் மிளகு பொடித்து உபயோகிப்பது நல்லது.

மைக்ரோவேவில் வைக்கும் போது மீனின் அளவுக்கு ஏற்றார் போல் நேரத்தை கூட்டியோ குறைத்தோ செய்யுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Thanku so much :) naan padam supernu solla ulla vandhen... paarthaa en recipenu irukku :P magizchi.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பழைய சாதத்துல வடகம் எப்படி செய்றதுனு சொல்லுங்க frnds.......