நிலா

ஒரே புள்ளியில்
ஓர் அழகிய கோலமே நிலா!
ஓரெழுத்தில்
ஒரு கவிதை நிலா !
வானம் எழுதிய நட்சத்திரக் கவிதைகளின்
முற்றுப் புள்ளியே
முழு நிலா!
நட்சத்திர முட்களின் மத்தியில்
ஒரேயொரு பலாச்சுளை நிலா!
நிலாப் பழம்
நட்சத்திர பருக்கைகள்.. உண்டபின்
கைத்துடைக்க
கார்மேக பஞ்சு !
- ஷேக்

ஒரு மழைக்கால இரவு

கருகொண்ட மேகத்தாயின் முகம் கருமையானது
தீடிரென்று தன் பிரசவ வலியை
இடி வார்த்தைகளால் கதறியபடியே
கார்மேகத்தாய் தெரிவிக்க...
மின்னல் நரம்புகள் புடைக்க..
மேகமென்ற தண்ணீர் குடத்தை உடைத்து
பிறந்த குழந்தை நிலா!
- ஷேக்

குறைபாடுகள்

எல்லா கிராமத்து இரயில்வே ஸ்டேஷனிலும்
பறவைகளின் எச்சங்களை மச்சமாக கொண்டு
ஒரு சிமெண்ட் பெஞ்ச்
அநாதையாகவே கிடக்கிறது
அமர்வாரின்றி...
எல்லா கல்யாண வீட்டு பந்தியிலும்
உப்போ அல்லது உறப்போ
கூடி விடுகிறது... குறைந்து விடுகிறது..
எப்படியாயினும்..
விருந்தினர்களின் தீடீர் வருகை
கை பிசையும் கிராமத்து ஏழை
பின்வாசல் வழியே
அரிசியோ காய்கறியோ
கடன் வாங்கும் நிலை ..
வேண்டபட்டவரின் முக்கியமான கல்யாணம்
நிராகரிக்கப்பட்டது என்னால்
மனைவியின் நகை பேங்கில் இருப்பதால் ...
பெரிய வீட்டுக் கல்யாணத்தில் பாட்டுக் கச்சேரி
கேமரா தங்களை நோக்கி வரும்போது
பார்த்தும் அதை பார்க்காதது போல்
பழைய கால பள்ளித் தோழியைப் போல் நடிக்கும்
பார்வையாளர்கள்..
விபரம் தெரிந்த நாளிலிருந்தே
செய்து கொண்டிருக்கும் சாதனை;
வாய்க்கு வெளியே நுரைபடாமல்
பிரஷ்சினால் பல் தேய்த்ததே இல்லை..
மனதை கட்டுப்படுத்தும் வைராக்கியத்தில் தொழுதாலும்..
ஏதோ ஒரு சிந்தனையில் தடுமாறாமல்
தடம் மாறாமல் இதுவரை தொழுததில்லை!
ஆணழகனோ அரவிந்த சாமியோ இல்லைதான்
ஆனாலும் கண்ணாடி முன்னால்
தங்களை அலங்கரித்துக் கொள்ளும் எல்லோரும்
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சியை நினைவுப் படுத்துகிறார்கள் ..
கல்யாண வீட்டு பந்தலின் வெளியே
வந்திருக்கும் நபர்களில் சரிபாதி அதிகமாகவே
காணப்படுகிற செருப்புகளின் எண்ணிக்கை...
நெற மாசத்திற்கு பிறகு முதல் வாரத்திலேயே
சம்பளம் பிரசவமாகிடுந்தான்..
ஆனாலும் கையில ஏந்திய தண்ணீர்
சிந்திய கதைதான் ...
இன்னைக்கு என்ன கறி வைக்க
விடிஞ்சா இதே பெரிய பொழப்பா போச்சென்ற
பெண்களின் புலம்பலின்றி பொழுதுகள் புலர்ந்ததில்லை...
காலநிலை என்பது மாறிக்கொண்டே இருப்பது தெரிந்தும்..
ஸ்ஸப்பா... நேற்றை விட இன்னைக்கு வெயிலு ஜாஸ்தி
என அலுவலின்போது
அலுத்துக் கொள்ளாத நாளில்லை..
நல்ல கவிதைதான் எனினும்
பொறாமையிலோ பொறுமையின்மையிலோ
கருத்திடாமல் நகர்ந்திடும் மனம்...
- ஷேக்

அம்மா

அம்மா அன்பின் அமீபா !
பாசத்தின் பரமேசியம்!
நடமாடும் இடிதாங்கி!
யாரங்கே வள்ளுவரா??
கண்ட பாலுக்கெல்லாம்
கவனம் செலுத்தினீர்!
தாய்பாலுக்கென
தனி அதிகாரம் மறந்ததேன்??
வலி துயரம் எத்தனை நிமிடம்
நீங்கள் பொறுப்பீர்??
பத்துமாதம் பொறுப்பாள்
தாய்!
இன்னொரு ராகம் கண்டுபிடித்தது
இளையராஜாவா இருக்கலாம்.
தாலாட்டை கண்டுபிடித்தது தாய்மட்டுந்தான்!
தலைவலி காய்ச்சல்
இன்னும் இதர நோய்கள்
குறுக்கு வழியில் குணமானது
அன்னையின் அன்பினாலே..
அன்பிற்காக அடிக்கடி துடிப்பதால்
இவள் இன்னொரு இதயம் !
எல்லா சொகுசு
அறைகளும் இருக்கைகளும்
அம்மாவின் மடிக்கு
நினைவுக்கு தெரிந்தவரை
நிகரில்லை!
கன்னத்தில் முதல் முத்தத்தின்
முத்திரை அம்மாயிட்டது!
முதலில் என் அந்தரங்கள்
தொட்டு கழுவியது
தண்ணீரும்
தாயும் மட்டுமே!
அம்மாவுக்கு போகத்தான்
அனைத்தும் மிச்சம்;
அன்பிலிருந்து அனைத்தும்
அம்மா வைத்த எச்சம!
- ஷேக்

Comments
sheik
Super, amazing. it is so nice. No words to say. enjoy your poem.
அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை
Thamarai selvi sako
தேங்க்யூ சோ மச் சிஸ்டர் ஆக்சுவலி.. ரொம்ப நாள் ஆச்சு நான் இங்கே வந்து கவிதை கதை எழுதி! வெளியூருக்கு போனதால் தொடர்பு இல்லாமல் போய் விட்டது! இனி தொடர்ந்து வருவேன் இன்ஷா அல்லாஹ்!!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
Babu ji@team members
உடனடியாக என் கவிதைகளை வெளிட்ட பாபு அண்ணன் மற்றும் குழுவினர்க்கு மனமார்ந்த நன்றி
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஷேக்... ;)
//நல்ல கவிதைதான் எனினும்
பொறாமையிலோ பொறுமையின்மையிலோ
கருத்திடாமல் நகர்ந்திடும் மனம்...// ;)))))) ஹாஹாஹா!! முடியல ஷேக்! ;)))
- இமா க்றிஸ்
imma teacher
ha ha ha..just kidding in words..not searious teacher..thank u
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
Sheik bro
//நல்ல கவிதைதான் எனினும்
பொறாமையிலோ பொறுமையின்மையிலோ
கருத்திடாமல் நகர்ந்திடும் மனம்...// மனம் வரவில்லை கருத்திடாமல் செல்ல.:)). மேலும் பல கவிதை விருந்து அடிக்கடி இங்கு படைக்க வேண்டும்.
Be simple be sample
Sheik, your poem shaked me to
Sheik, your poem shaked me to drop my comments as they are commendable.Sorry for English. It's 3.30 am now. No laptop is accessible. Will come tomorrow with Tamil.
//நல்ல கவிதைதான் எனினும் பொறாமையிலோபொறுமையின்மையிலோ கருத்திடாமல் நகர்ந்திடும் மனம் ...// ha....ha Nice creativity.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
ஜெயந்தி
ஷேக் அண்ணா,
4 கவிதைகளுமே ரொம்ப நல்லா இருக்கு,
குறைபாடுகள் கவிதை இன்னும் அருமை.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…

அன்புடன்,
* உங்கள் சுபி *
Revathi sako
//மேலும் பல கவிதை விருந்து அடிக்கடி இங்கு படைக்க வேண்டும்.//sure..why not..thank u sister.
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
Jaypon sako
//Sheik, your poem shaked me to drop my comments as they are commendable.Sorry for English. It's 3.30
am now. No laptop is accessible. Will come tomorrow with Tamil.//
sheik shocked u ah??ha Rofl...its ok sako..u are welcome always..!!thanks for ur comments!!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
Subi sako
//4 கவிதைகளுமே ரொம்ப நல்லா இருக்கு,
குறைபாடுகள் கவிதை இன்னும் அருமை.//
thank u..thank u..Thanks a lot..keep reading my poems..
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
அறுசுவைக்கு அழகு, பாதுகாப்பு தமிழ் ஒன்றே
//sheik shocked u ah??// நான் எங்கே சொன்னேன் //Shaked me//என்னை உலுக்கியது என்றுதானே சொன்னேன். தங்கிலீஷ் தாறுமாறா இருக்கும்னு இங்கிலிஷில் போட்டால் அதுவும் தொல்லையா? அறுசுவைக்கு அழகு, பாதுகாப்பு தமிழ் ஒன்றே :-)
//அன்பிற்காக அடிக்கடி துடிப்பதால்
இவள் இன்னொரு இதயம் !// அருமை
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
ஜெயந்தி
joypon sister
once again..thank u so much..keep reading my poems d story..
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
கவிதைகள்
ஷேக் சார்..
கவிதைகள் அனைத்தும் அருமை..எனக்கு அம்மா கவிதை ரொம்ப பிடிச்சது..
//அன்பிலிருந்து அனைத்தும்
அம்மா வைத்த எச்சம்!// ஆகா..
அன்புடன்,
கவிதாசிவக்குமார்..
anbe sivam
மறக்க முடியவில்லை! ;))
//நிலாப் பழம்
நட்சத்திர பருக்கைகள்.. உண்டபின்
கைத்துடைக்க
கார்மேக பஞ்சு !//
அவ்வ்!!
நிலா... ஷேக்கின் கவிதையின் கன்னத்தில்... சின்..னதாக ஒரு திருஷ்டிப் பொட்டு!! ;)))) புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ;)
இமா ஒரு தடவை படிச்சா நூறு தடவை படிச்ச மாதிரி, மறக்க மாட்டேன். தோசை மாவு கூட நினைப்பு இருக்கு எனக்கு. ;) இங்க புதுசா 'கார்' சேர்ந்திருக்கு. ;) இனிமேல் அறுசுவைக்கு அனுப்பும் கவிதைகளில் நீங்கள் வேறு இடங்களில் வெளியிடும் கவிதைகளின் சாயல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் கருத்துக்கோ கற்பனைக்கோ வார்த்தைக்கோ பஞ்சமிருப்பதாகத் தெரியவில்லை. புதிது புதிதாகப் படைக்கும் ஆற்றல் உள்ள ஒருவருக்கு, ஏன் இந்த வேலை! புரியவே இல்லை ஷேக்!! ;((
- இமா க்றிஸ்
குறைபாடுகள்
கவிதை அருமை ஷேக். சொல்லிருந்தவை ரசிக்கும்படி இருந்தன.
குறைபாடுகள் - உ'ற'ப்போ, 'தீ'டீர், பிரஷ்'சி'னால், ஒழுங்காகப் போன கவிதை வரிகளின் நடுவில் திடீரென்று பேச்சு வழக்கில் (நெற மாசத்திற்கு பிறகு) ஒரு பந்தி வந்தது.
//பொன் குஞ்சியை// பொன் குஞ்சை என்றிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஷேக். அல்லது ஒட்டுமொத்தக் கவிதையையும் பேச்சு வழக்கில் எழுதியிருக்க வேண்டும்.
//தாய்..பாலுக்கென// நடுவில் 'ப்' வந்திருக்க வேண்டாமா!.
//தீடிரென்று// தி..டீ..ரென்று
//அம்மா'யி'ட்டது!// அம்மா இட்டது!! அம்மாவிட்டது!! எழுத்து வழக்கில் அங்கு 'யி' வராது.
//அந்தரங்கள்// !! கவிதை என்று பார்த்தால்... அந்தரங்கள் / சங்கடங்கள் - வார்த்தை பொருத்தம் என்று வாதிடலாம். ;) அந்தரங்கம் என்று எழுத நினைத்தீர்களா அல்லது 'அந்தரம்' தானா அது!
//எச்சம!// ம் - மெய்யெழுத்து - குற்றைக் காணோம்.
//நல்ல கவிதைதான் எனினும்
பொறாமையிலோ பொறுமையின்மையிலோ
கருத்திடாமல் நகர்ந்திடும் மனம்...// ;)) கருத்துச் சொல்லாமல் அமைதியாக இருந்தால், 'பொறாமையிலோ பொறுமையின்மையிலோ' என்று தோன்றும். அதனால் இந்தக் கருத்தைப் பதிவிடுகிறேன். ஷேக் திட்டக் கூடாது என்னை. அழைக்காமல் அழைத்த உங்கள் மேல் தான் தப்பு. ;))
மேலே சொன்ன விஷயங்களைத் தவிர்த்துப் பார்த்தால்... எல்லாக் கவிதைகளுமே நன்றாக இருக்கின்றன ஷேக். அம்மா பற்றிய கவிதை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
- இமா க்றிஸ்
kavitha sako
//ஷேக் சார்..
கவிதைகள் அனைத்தும் அருமை..எனக்கு அம்மா கவிதை ரொம்ப பிடிச்சது..//
Thank u kavitha sako..yenakkum pidithathu athuthaan...dont call me sir...sako is enough
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
இமா டீச்சர்! அப்பப்பா .
இமா டீச்சர்! அப்பப்பா என்ன ஒரு நியாபக சக்தி!! இந்த கவிதையே இங்கேயே நான் முன்னாடி பதிந்திருக்கேன்! ரொம்ப நாள் ஆச்சி! இனிமே கவனமாக இருக்கிறேன் உங்க கிட்டேயும் ..பழைய என்னுடைய கவிதைகள் கிட்டேயும்.. தேங்க்யூ!!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
imma teacher
// மேலே சொன்ன விஷயங்களைத் தவிர்த்துப் பார்த்தால்... எல்லாக் கவிதைகளுமே நன்றாக இருக்கின்றன ஷேக். அம்மா பற்றிய கவிதை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.//
சமாளிப்புக்காக இல்லை டீச்சர்! என் படைப்புகளை நான் பிழை சரிபார்ப்பதே இல்லை !மொபைலில் பணினி கீப்போர்டு யூஸ் பண்ணிதான் டைப் பண்றேன்! இனி இங்கே வந்தாச்சுல்ல.. கண்ணுல எண்ணெய ஊத்தி கவனமா இருக்குறேன்! இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வருவேன்!!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஷேக்
//என் படைப்புகளை நான் பிழை சரிபார்ப்பதே இல்லை !// ம்ஹும்! ;( இப்படிச் செய்வதோ அதைப் பெருமையாகச் சொல்லுவதோ வளர்ந்துவரும் ஒரு படைப்பாளிக்கு அழகல்ல சகோதரரே! இதுவும் பரீட்சை போல தான். கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.
//இந்த கவிதையே இங்கேயே நான் முன்னாடி பதிந்திருக்கேன்! ரொம்ப நாள் ஆச்சி!// என்ன சொல்வது என்று தெரியவில்லை!
- இமா க்றிஸ்
imma teacher
அதான் சொல்லிட்டேனே டீச்சர் இனி சரி பார்க்கிறேன் என்று. ! சும்மா ஏதாச்சும் சொல்லிட்டு போங்க! என்ன சொல்ல தெரியலைனு சொல்லாதிங்க! ஹி ஹி ஹி!!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஷேக் அண்ணா,
எல்லா கவிதைகளும் ரொம்ப நல்லாயிருக்குங்க..
"அம்மா" கவிதை ரொம்ப அருமைங்.
வாழ்த்துக்கள்
நட்புடன்
குணா
ஷேக் கவிதை
அழகான சொல் விதைத்து
அருமைக் கவி படைத்து
அறுசுைவையில் உலவ விட்ட
உங்கள் கவி அற்புதம்
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.