ஸ்டென்சில் பெயிண்டிங்

ஸ்டென்சில் பெயிண்டிங்

தேதி: August 26, 2015

4
Average: 3.4 (5 votes)

 

குழந்தைகளின் ஆடை
ஃபேப்பரிக் பெயிண்ட்
டூத் ப்ரெஷ்
செல்லோ டேப்
கத்தரிக்கோல்
வெள்ளைநிற தாள்
பேனா

 

குழந்தைகளின் ஃப்ராக் அல்லது சட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து எடுத்துக்கொள்ளவும். மற்றவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
தேவையானவை
வெள்ளைநிற தாளில் CUTE GIRL என்ற வார்த்தையை இடைவெளிவிட்டு சிறிது தடிமனாக எழுதிக் கொள்ளவும். பின்னர் கத்தரிக்கோலால் அவற்றை தனித்தனி எழுத்துக்களாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஸ்டென்சில்
பெயிண்ட் செய்ய போகும் சட்டையை அயர்ன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
டிஷர்ட்
நறுக்கி வைத்திருக்கும் எழுத்துக்களை படத்தில் உள்ளது போல் இரண்டு பக்கமும் வைத்துவிடவும். வலது பக்கம் CUTE என்ற வார்த்தையும், இடது பக்கத்தில் GIRL என்ற வார்த்தையும் வைக்கவும். தேவையெனில் எழுத்துக்கள் நகராமல் இருப்பதற்கு செல்லோ டேப்பை சின்ன சின்ன துண்டாக நறுக்கி ஒவ்வொரு எழுதிலும் ஒட்டி விடலாம்.
டிஷர்ட்
சட்டையில் வைத்த எழுத்துகளுக்கு மேலும், கீழும் மிகச்சிறிதளவு இடைவெளி விட்டு இரண்டு வெள்ளைநிற பேப்பரை வைக்கவும்.
பேப்பர்
பிங்க் மற்றும் வெள்ளைநிற பேப்பரிக் பெயிண்டை தேவையான அளவு எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து ஒன்றாக கலந்து வைக்கவும்.
பெயிண்ட்
டூத் ப்ரெஷ்ஷில் பெயிண்டை தொட்டுக் கொண்டு ஆள்காட்டி விரலால் ஸ்ப்ரே செய்துக் கொண்டே வரவும்.
பெயிண்ட் ஸ்ப்ரே
இந்த எழுத்துக்கள் முழுவதற்கும் முதலில் பிங்க் நிற பெயிண்டைக் கொடுக்கவும்.
பெயிண்டிங்
அடுத்து நீலம் மற்றும் வெள்ளைநிற பெயிண்டை கலந்து வெளிர் நீலநிறமாக கலந்து வைக்கவும்.
வண்ணம் தயாரிப்பு
ப்ரெஷ்ஷில் தொட்டுக் கொண்டு மேலே சொன்னது போல் செய்யவும். இந்த பெயிண்ட் கொடுத்து முடித்ததும் மஞ்சள்நிற பெயிண்டையும் இதுப்போல் தீட்டி விடவும்.
பெயிண்ட் தீட்டுதல்
எல்லாவற்றிற்கும் பெயிண்ட் கொடுத்து முடித்ததும் இரண்டு பேப்பரையும் முதலில் எடுத்து விடவும். அடுத்து ஓவ்வொரு எழுத்துக்களாக எடுக்கவும்.
பெயிண்ட் தீட்டுதல்
அழகிய ஸ்டென்சில் பெயிண்டிங் ரெடி. விரும்பிய எழுத்துக்களையோ படங்களையோ இதேப் போல் எளிமையாக பெயிண்டிங் செய்யலாம்.
ஸ்டென்சில் பெயிண்டிங்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஐடியா சூப்பர்,
ரொம்ப அழகா இருக்கு..... U Really Cute Girl தான் போங்க.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சூப்பரா இருக்கு. ஃபாப்ரிக் பெய்ண்ட்ல‌ ஸ்ப்ரேயிங் நினைச்சுப் பார்த்தது இல்லை. அடுத்த‌ வருடம் ஏதாவது ஒரு வகுப்பு க்ராஃப்ட் ப்ராஜெக்ட் கிடைச்சாச்சு. குறிச்சு வைக்கிறேன். :‍‍‍‍‍)

‍- இமா க்றிஸ்