புற்றுநோய்

என் வயது 25 எனக்கு இரத்த புற்றுநோய் இருக்குனு ஒரு மாதம் முன்பு தெரியவந்தது அதற்கான சிகிச்சையும் எடுத்து வருகிறேன் நான் குழந்தை வைத்துக்கொள்ளலாமா,குழந்தைக்கும் நோய் வருமா

//நான் குழந்தை வைத்துக்கொள்ளலாமா// கேள்வி புரியவில்லை சகோதரி. ஏற்கனவே இருக்கும் உங்கள் குழந்தையைத் தூக்கி வைத்திருக்கலாமா? பராமரிக்கலாமா? கொஞ்சலாமா என்கிறீர்களா? நிச்சயமாக‌. இதற்குத் தடை ஏதும் கிடையாது. //குழந்தைக்கும் நோய் வருமா// புற்றுநோய் தொற்று நோய் அல்ல‌. இது பற்றிப் பயமே வேண்டாம்.

இன்னொரு குழந்தை தங்குவதைப் பற்றிக் கேட்டிருந்தீர்களானால்... அது உங்கள் மருத்துவரிடம் பேச‌ வேண்டிய‌ விடயம் என்பேன்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா அக்கா நான் இன்னொரு புதிதாக குழந்தை வைத்துக்கொள்ளகேட்டேன்

குழந்தைக்கு நோய் வராது. நீங்கள் பெற்று கொள்ள கேக்கிறீர்களா எடுத்து வளக்க கேக்கிறீங்களா என்று புரியாமலே பதிலளிக்கிறேன். குழந்தை வளர்ப்பதானால் பிரச்னை இல்லை குழந்தைக்கு தொற்றாது . ஆனால் நீங்கள் பெற்று கொள்ள நினைத்தால் கஷ்டம். காரணம் நீங்கள் ற்றீட்மண்ட் எடுக்க தொடங்கியிருப்பீங்கள் .அந்த ற்றீட்மண்ட் வயித்தில குழந்தை வந்தா எடுக்க முடியாது .உங்களுக்கும் நல்லதில்ல குழந்தைக்கும் நல்லதில்ல . ஆனால் அதையும் மீறி சிலர் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கத்தான் செய்கிறார்கள் . சிலர் ற்றீட்மண்ட் ஐ இடையே நிறுத்தி விட்டு குழந்தை பெற்றெடுப்பார்கள். அது தாய்க்கு நல்லதல்ல .மொத்தத்தில முழுக்க முழுக்க உங்கள் ஆரோக்கியத்தில கவனம் செலுத்தி தேறுவதே இப்போதைக்கு நல்லது .

:‍) இப்போதும் நீங்கள், 'குழந்தை பெற்றுக் கொள்ள‌,' என்று கேட்கவில்லை; 'வைத்துக் கொள்ள‌,' என்கிறீர்கள். எனக்குப் புரியவில்லை. தத்து எடுத்து வளர்க்கப் போகிறீர்களா? கருத்தரிக்க‌ விரும்புகிறீர்களா? கேள்வியைத் தெளிவாக‌ வைக்காவிட்டால் பதில் கொடுப்பவருக்குச் சிரமம். ஊகத்தில் தவறான‌ பதிலை, வேண்டாத‌ பதிலைச் சொல்லி உங்களைச் சங்கடத்தில் ஆழ்த்திவிடக் கூடாது இல்லையா! சுரேஜினியும் நானும் ஒரே சந்தேகத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் பதில் சொல்கிறோம்.

//நீங்கள் பெற்று கொள்ள நினைத்தால்// ‍உங்கள் சிகிச்சைக்கு இடையில் குழந்தை!! உங்கள் மருந்துகள் இரத்தம் மூலம் குழந்தைக்குக் கடத்தப்படும். இது குழந்தையைப் பாதிக்கும். குழந்தை வயிற்றில் வளர‌ இப்போதுள்ள‌ உங்கள் நிலையில் உங்கள் ஆரோக்கியம் மேலும் பாதிக்கப்படும்.

அல்லது நீங்கள் சிகிச்சையை நிறுத்த‌ வேண்டும். எப்படிக் குணமாவீர்கள்? அதோடு குழந்தை வயிற்றில் பெரிதாக‌ உங்கள் உடல் நிலை என்ன‌ ஆகும்!!! அதனால் குழந்தைக்கும் பாதிப்புத்தானே! குழந்தை பாவம் இல்லையா!

பிறகு குழந்தை சிசேரியன் என்றாலும் கூட‌, உங்களுக்கு இதற்கும் அதற்குமாக‌ இரட்டிப்பு ஓய்வு தேவைப்படும். குழந்தையை நீங்கள் வளர்ப்பது சாத்தியமா! யாராவது பார்ப்பார்கள் என்று வைத்துக் கொள்வோம்... அவர்கள் உங்களையும் பார்த்து, இருக்கும் குழந்தையையும் பார்த்து, பிறக்கும் குழந்தையையும் பார்த்து!! சாத்தியமா?? அவர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கும். ஒரு மாதம் இரண்டு மாதத்தில் முடிந்து விடும் விடயமா இது!! அவர்கள் களைத்துப் போக‌... உங்கள் மனது களைத்துப் போகும். ம்ஹ்ம்! ஆசையை சில‌ வருடங்களுக்கு ஒத்திப் போடுங்கள்.

ஆரோக்கியமான‌ குழந்தை கிடைக்க‌ தாய் ஆரோக்கியமாக‌ இருக்க‌ வேண்டும். வளர்க்க‌ இன்னும் ஆரோக்கியமாக‌ இருக்க‌ வேண்டும். இங்கு எத்தனை இழைகள் ஒவ்வொரு வாரமும் குழந்தை வளர்ப்பு தொடர்பாக‌ வருகின்றன‌ என்று பாருங்கள். உங்களால் தனித்து அனைத்திற்கும் முகம் கொடுக்க‌ முடியுமா?

உங்கள் இடத்தில் நான் இருந்தால்... இப்போது என் உடல்நிலை சரியாவதில்தான் என் முழுக் கவனமும் இருக்கும். அத‌ற்கு அடுத்தபடி... இருக்கும் குழந்தையோடு சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பேன். 100% எனக்குக் குணமாகிற்று என்று மருத்துவர்கள் சொன்ன‌ பிறகும் ஒரு வருடம் கழித்துத்தான் இன்னொரு குழந்தையைப் பற்றி யோசிப்பேன். இன்னும் சொல்ல‌ நினைக்கிறேன். வேண்டாம். உங்கள் வேலைகளை முழுமையாக‌ நீங்கள் தனித்துப் பார்க்கும் தைரியம், உங்கள் உடலுக்கும் மனதுக்கும் வர‌ வேண்டும். இப்படி அறுசுவையில் இழை போடாமல், 'நான் குழந்தைக்கு ரெடி,' என்று உங்களால் தைரியமாகச் சொல்ல‌ முடிய‌ வேண்டும். அப்படி எல்லா நிலமைகளும் கூடி வரும் போது தாராளமாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் ஆசைக்காக‌ இன்னொரு சின்ன‌ உயிரைச் சிரமப்படுத்தக் கூடாது. யோசியுங்கள். இதனால்தான் சுருக்கமாக‌ உங்கள் மருத்துவரிடம் பேசச் சொன்னேன்.

‍- இமா க்றிஸ்

இறையருளால் விரைவில் நலம் பெற‌ வாழ்த்துக்கள்.

www.arusuvai.com/tamil/node/15326 dated 24th june 2010 pl. kindly go to
this page and have the treatment for the blood cancer. pl. kindly see this page,
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

எனக்கு ஏற்கனவே ஒரு பையன் 4 வயதில் இருக்கிறான். நான் அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ள கேட்டேன் எனக்கு நன்கு விளக்கம் அளித்ததுக்கு நன்றி.

நன்றி அக்கா

அக்கா நீங்கள் சொன்னபடி அந்த Page ல பார்த்த பச்சிலை பற்றி நான் விசாரிக்கிறேன்.

:‍) அவர் பெயர் சு..ரே..ஜினி, சு..ரோ..ஜினி அல்ல‌. ;)

‍- இமா க்றிஸ்

Sorry sisters

மேலும் சில பதிவுகள்