புற்றுநோய்

என் வயது 25 எனக்கு இரத்த புற்றுநோய் இருக்குனு ஒரு மாதம் முன்பு தெரியவந்தது அதற்கான சிகிச்சையும் எடுத்து வருகிறேன் நான் குழந்தை வைத்துக்கொள்ளலாமா,குழந்தைக்கும் நோய் வருமா

Enoda frnd ku cancer iruku pa treatment eduthutu tha irukaga pa. Nega natu marunthu kelvi pattu irukigala Bangalore la ananthapuram la oru periyavar cancer ku marunthu kodukuranga pa nalla improvement irukuthu pa nega try pani paruga pa

எனது மகனுக்கு 3 வயதாகிறது.

5 நாளுக்கு முன் எனது மகனின் வயறு சற்று வீங்கி இருந்தது. மருத்துவரிடம் சென்று பார்க்கும் போது அவர் சொன்னார், ஈரல் வீக்கம் உள்ளது இரத்தத்தை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று. அவ்வாறு பரிசோதித்து பார்த்ததில் எனது மகனின் இரத்ததில் எ எல் எல் என்ற ஒறுவிதமான் புற்றுநோய் இருப்பதாக சொன்னார்.

இப்போது ஒரு பெரிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளேன்.

எனது மகனின் இந்த பிரச்சனையெ சரி செய்து அவன் மீண்டு வருவானா?

எவ்வளவு காலம் அவனுக்கு இந்த பிரச்சனை இருக்கும்??

பழயபடி எனது மகனால் மற்ற குழ்ந்தைகளைப் போல வாழ முடியுமா???

நல்ல பதிலை தாருங்கள்.

பொதுவாக ஓர் நோய் பற்றிக் கட்டுரை எழுதுவதற்கும் இங்கு வரும் நோயாளிகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

நீங்கள் சிகிச்சையை ஆரம்பித்துவிட்டீர்கள் என்பது ஆறுதலான விடயம்.

//எனது மகனின் இந்த பிரச்சனையெ சரி செய்து அவன் மீண்டு வருவானா?//
சில கேள்விகளை மருத்துவரிடம் கேட்டால் கூட ஆம், இல்லை என்கிற பதில் கிடைக்காது. 'இத்தனை %' என்பார்கள் அல்லது போகப் போகச் சொல்வார்கள். சிகிச்சையோடு மருத்துவர்கள் முடிவு முன்பின்னாக மாறலாம். சரியாகி மீண்டு வருவார் என முழுமையாக நம்புங்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை.

//எவ்வளவு காலம் அவனுக்கு இந்த பிரச்சனை இருக்கும்?//
உங்கள் குழந்தையைப் பார்க்கும் மருத்துவர்தான் இதற்குப் பதில் சொல்ல முடியும். மகன் என்ன நிலையில் அனுமதிக்கப்பட்டார் என்பது அங்குள்ளவர்கள்களுக்குதான் தெரியும். வெளியார், மருத்துவர்களானாலும் அவர்கள் கற்றதையும் அனுபவத்தையும் வைத்து ஊகமாகச் சொல்லலாமே தவிர நிச்சயமாகச் சொல்ல இயலாது இல்லையா? எந்த விதமான புற்றுநோயானாலும் சிகிச்சை சற்று நீளமானதாகத் தான் இருக்கும். பிறகும் இடைக்கிடை சிகிச்சை அல்லது மீண்டும் சோதித்துப் பார்க்க என்று இடையில் போய்வர வேண்டி இருக்கும்.

//பழயபடி எனது மகனால் மற்ற குழந்தைகளைப் போல வாழ முடியுமா?//
குழந்தைகள் பெரியவர்கள் போல அல்ல, அவர்களது விளையாட்டுக் குணம் அவர்களை விட்டுப் போவதில்லை. இயலாமலிருக்கும் போது தவிர மீதிப் பொழுதுகள் அவர் சாதாரணமாக இருப்பார். உங்கள் மனக் கஷ்டங்களைக் காட்டிக் கொள்ளாமல் அவரைச் சந்தோஷப்படுத்துங்கள்.

உங்கள் மனதில் எழும் கேள்விகள் அனைத்திற்கும் விளக்கம் கொடுப்பது மருத்துவர்கள் கடமை. தயங்காமல் கேளுங்கள்.

தைரியமாக இருங்க. சின்னவர் சிரமப்படாமல் குணமாக என் அன்பான பிரார்த்தனைகள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்