கம்பு சாதம்

தேதி: August 27, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (6 votes)

 

கம்பு - 100 கிராம்
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு


 

கம்பை சுத்தம் செய்து லேசாக நீர் தெளித்து ரவை போல கொரகொரப்பாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீரை வைத்து கொதிக்க விடவும்.
அரைத்த கம்பை தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கரைத்துக் கொள்ளவும்.
கொதிக்கும் தண்ணீரில் கரைத்து வைத்திருக்கும் கம்பை ஊற்றி கிளறவும்.
சில நிமிடங்களில் கம்பு வெந்துவிடும்.
இரவு இதேப் போல் செய்துவிட்டு மறுதினம் காலையில் பார்த்தால் படத்தில் இருப்பது போல் இருக்கும்.
அதில் தயிர் கலந்து சாப்பிடலாம். வயிற்றிற்கு நல்ல குளிர்ச்சியை தரும். துவையல் இதற்கு பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நாங்கள் இது போல‌ செய்வதை தான் கம்பங்கூழ் என்று சொல்வோம். இதனுடன் தண்ணீர் தயிர் சேர்த்து பிசைந்து கூழாக‌ குடிப்போம். சத்தான‌ உணவு. உடலுக்கு மிகுந்த‌ குளிர்ச்சி அளிக்க‌ கூடியது.

எல்லாம் சில‌ காலம்.....

நாங்கள் இதை காலை உணவாக‌ எடுத்துக் கொள்ளுவோம். துவையலுடன்...
பதிவுக்கு நன்றி:))

its so healty mam