3 month baby

என் பொண்ணு பொறந்து 87 நாள் ஆகுது .motion சரியாய் போக மாட்டுக்கு.இப்போ motion பொய் 9 நாள் ஆகுது.பால் குடிச்ச உடனே vomit பண்றா.vomit ல சளி வருது.இப்போ 4.5 kg இருக்கா . திடீர் திடிர்னு அழுறா ப்ளீஸ் என்ன பண்ண வேண்டும் சொல்லுங்க ப்ளீஸ் .

தாய் பால் என் பொண்ணுக்கு போதுமா நு எனக்கு தெரியல. என் பொண்ணு பால் கொஞ்சம் தான் குடிக்கா அப்படியே தூங்கிரியா .அவளுக்கு போதுமா ப்ளீஸ் எனக்கு பதில் சொல்லுங்க

நீங்கள் எந்த‌ ஊரில் வாழ்கிறீர்கள் என்று தெரிந்தால் நல்லது. அங்கு என்ன‌
கிடைக்கும் கிடைக்காது என்று தெரிந்து வைத்தியம் சொல்ல‌ வசதியாக‌ இருக்கும்
நீங்கள் தமிழ் நாட்டில் இருந்தால் நாட்டு மருந்து கடைகளில் குழந்தைக்கான
உரைமருந்து என்றுகேட்டால் தருவார்கள், அதைப் பயன்படுத்தும் முறையையும்
அவர்களிடமே கேளுங்கள், மருந்துகளை பாலில் வேகவைத்துத்தான் பயன்படுத்த‌
வேண்டும். பிரசவ‌ லேகியம் கிடைக்கும். சித்தா/ஆயுர்வேதம்/வைத்திய‌
அரசு மருந்து கடைகளில் கேட்டு வாங்குங்கள். அது பிரசவித்த‌ தாய்க்கும் சேய்க்கும் மிக‌ மிகத் தேவையான‌ லேகியம். உங்கள் வீட்டில் பெரியவர்கள் யாரும் உதவிக்கு இல்லையா? அருசுவையிலேயே பேறுகாலம் மருத்துவம்
பகுதிகளில் போய்ப் பாருங்கள், நிதானமாக‌ பதற்றம் இல்லாமல் தேடுங்கள்.
நீங்கள் வாழும் பகுதியில் என்ன‌ கிடைக்கும் என்று பாருங்கள்.
யூ ட்யுபில் நாட்டு மருத்துவம் பகுதியில் பாருங்கள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

அன்புள்ள அக்கா
ரொம்ப thanks அக்கா . எனக்கு திருநெல்வேலி .நீங்கள் சொன்ன மாதிரி பண்றேன் அக்கா

En ponnu ku gas pogum pothu romba smell varuthu 10 days ah motion pogala enna panna.nan doctor oru tablet thanthanga nan athai motion pogura place la vachi than motion edukuren weekly once. But enakku payama irukku.ponnu poranthu 15 days la irunthey intha problem irukku.ippo 3 month aakuthu.pls sagothara sagotharigale help pannunga.

Nana kayavaitha karuppu thiratsai(karuppu kirusmis pazham) hot water la pottu aara vaithu 2 days ah koduken but motion pogala.intha site la ellorum athu than solli irunthangala so na 2 days koduthuten motion poga mattaku pls help me sisters

Akka urai marunthu all Sunday kodukka than seirom but motion poga mattaku.help pannunga akka

இத்தனை நாள் இடைவெளி இருப்பதால்.. //gas pogum pothu romba smell// இருக்கத்தான் செய்யும். வெந்நீர், கிஸ்மிஸ், சப்பொசிட்டரி தவிர‌ வேறு என்ன‌ சொல்வது இத்தனை சின்னக் குழந்தைக்கு!

வெந்நீரில் சுத்தமான‌ சீனி கரைத்துக் கொடுத்துப் பாருங்கள்.

அதிக‌ நாட்கள் விட்டால் குழந்தைக்கு வேதையாக‌ இருக்கும். ஒரு தடவை திரும்ப‌ உங்கள் டாக்டருடன் பேசுங்க‌. ஒழுங்காக‌ வரும் வரை குறிப்பிட்ட‌ நாட்கள் இடைவெளியில் சப்பொசிடரி வைத்தாவது டாய்லட் போக‌ வைக்கிறது நல்லது என்று நினைக்கிறேன். வளர்ந்தவங்க‌ என்றால் வேற‌. அவங்களுக்கே இது வேதனையான‌ விஷயம். குழந்தை பாவம். ;( டாக்டரிடம் பேசுங்க‌.

‍- இமா க்றிஸ்

Vennir koduthute than iruken.innaiyodu serthu 3 days ah kismis pazham koduthuten.ethukume poga mattaku.today urasu marunthu kuda uthiten.eni sapositary vaithu than edukanum nu ninaiken.today mattum wait panni parthutu edukanum.payama irukku ithuve regular aakirum nu

அன்பு தோழி, குழந்தைக்கு பால் பௌடர் எதுவும் கொடுத்தால் இந்த மாதிரி பிரச்சனை வர வாய்ப்புள்ளது. தாய் பால் தான் என்றால் உங்கள் உணவு பழக்கம் மாற்றுங்கள். என் குழந்தைக்கு இந்த பிரச்சனை இருந்து என் உணவு பழக்கம் மூலம் சரி ஆனது. நிறைய நார் சத்து உணவு நீங்கள் எடுக்க வேண்டும். நான் நிறைய அத்தி பழம், கீரை சாப்பிட விரைவில் சரி ஆனது.

OK akka kandippa try panren akka

அன்புள்ள‌ ரேவதிக்கு உங்கள் ஊரில் ஓமியோபதி மருந்து கடை இருந்தால்
அந்தக் கடையில( நக்ஸ்வாமிகா 30 x என்று கேட்டு வாங்குங்கள். கடுகு சைசில்
இருக்கும். அதில் இரண்டு மாத்திரையை குழந்தையின் அடி நாக்கில் வையுங்கள்
தானாகக் கரைந்து விடும், தித்திப்பாக‌ இருக்கும். அதனால் குழந்தை துப்பாது.
மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மீண்டும் ஒரே ஒரு மாத்திரையை மட்டும்
முன்பு போல‌ அடி நாக்கில் வையுங்கள். மூன்று முறை போதும். அனேகமாக‌
மறு நாளே எந்த‌ சிரமும் இல்லாமல் மலம் கழியும். இரண்டு நாள்கள் பாருங்கள்
தொல்லையில்லாமல் மலம் கழிந்தால் மீண்டும் தர‌ வேண்டாம். ஆனால் வாரம்
ஒருமுறை மட்டும் ஒரு மாதம் தாருங்கள். மாத்திரையை ஸ்டாக் வைத்துக்
கொள்ளுங்கள். பெரியவர்களுக்கும் இது தான் மருந்து. இதைப் பற்றி நேற்றே
எழுதியிருப்பேன். எதற்கும் மருத்துவரிடம் கேட்டே எழுதலாம் என்றதால்
இன்று கேட்டுவிட்டே எழுதுகிறேன், (சென்னையில் அரசு மருத்துவமனையில்
ஓமியோபதி மருத்துவராகப் பணியாற்றுகிறார், என் நண்பரும் கூட‌)
தோட்டம் வீட்டுப் பிராணிகள் என்ற‌ தலைப்பில் செல்லப் பிராணிகளுக்கு
சில‌ ஓமியோபதி மருந்துகள் என்று தந்திருக்கிறேன். அதைப் பாருங்கள்.
ஓமியோபதியில் மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் நோய்களுக்கு ஒரே
மாதிரியான மருந்துகள் தான்,. ஓமியோபதி வெப் சைட்டில் போய்ப் பாருங்கள்.
தெளிவு கிடைக்கும். மருந்தை மசாலாக்களுடனும், கற்பூரம், காபி, டீ
இவற்றோடும் சேர்த்து வைக்கக் கூடாது. குழந்தைக்கு இந்த‌ மருந்து தரும்
போது நீங்களும் மேற்கூறியவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
மருந்தில் இரண்டு மாத்திரைகளை மட்டும் மூடியில் லேசாகத்தட்டி எடுத்துக்
கொள்ளவும், இரண்டுக்கு மேலாக‌ வந்து விட்டால் வேறு சுத்தமான‌ பாட்டிலில்
போட்டுவைத்துக் கொள்ளவும், பின்னால் பயன்படும், எக்காரணம் கொண்டும்
கீழே விழுந்த‌ மாத்திரையைச் சாப்பிடக்கூடாது,மீண்டும் மருந்து பாட்டிலில்
போடவே கூடாது போடவேகூடாது போடவே கூடாது.எச்சரிக்கை.
உங்களுக்கு இந்தத் தொல்லை இருந்தால் நீங்களும் சாப்பிடலாம்.NUX VOMICA 30x
இந்த‌ மருந்து யூரின் போகாமல் இருந்தாலும் கேட்கும்.
மருந்தின் ஆங்கிலப் பெயரைத் தந்திருக்கிறேன்.
அன்புடன் பூங்கோதை கண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Amma ponju enakaga kettu sonnanthuku romba thanks amma.

மேலும் சில பதிவுகள்