kulanthai varam vendum

எனக்கு கல்யாணம் ஆகி 5 வருசம் அயிருச்சு இன்னும் குழந்தை இல்லை ஆனா அதுக்குரிய‌ ட்ரீட்மெண்ட் எடுத்துகிட்ருக்கேன் . எனக்கு எந்த பிரச்சனையும் இல்லைனு டாக்டர் சொன்னாங்க‌ ஆனா என் கணவருக்கு விந்து கம்மியா இருக்குனு சொல்றாங்க‌ அதனால‌ எனக்கு வேற‌ ஒருத்தங்க‌ விந்து எடுத்து செலுத்தி குழந்தை பிறக்க‌ வைப்போனு சொல்றாங்க‌ என் கணவருக்கு இதுல‌ 50 சதவீதம் உடன்பாடு இல்ல‌ எனக்கு 100 சதவீதம் உடன்பாடு இல்ல‌, எனக்கு என் கணவர் மூலமா குழந்தை வேணும்னு ஆசைபடுறேன். அதனால‌ என் கணவருக்கு இயற்க்கை உணவு ( பாதம் பருப்பு, அத்தி பழம், செவ்வாழை பழம், மாதுளம் பழம் ) குடுக்குறேன் இது போதுமா இல்லை இது தவிர‌ விந்து அதிகரிக்க‌ வேற‌ ஏதாவது உணவு வகைகள் இருக்கா யாராவது சொன்னீங்கனா எனக்கு ரொம்ப‌ உபயோகமா இருக்கும். உதவுங்கள்

daily morning oora vacha badam,karuppu sundal sapdanum.milk la muscat dates: 8 (black dates) serthu sapdanum,daily morning naattu madhulai palam,athi palam,mundhiri,walnut,pistha,mulai kattiya paasi payaru sapdanum.ithuku piragu thaa morning breakfast 2 idly or dosai sapta podhum.sevvalai palam sapdanum.ipa sonathellaam morning sapda vendiyathu.30 mints ku oru thadava sapdanum.ellaathayum orey nerathula sapda koodathu.elaame konjamaa saptaale podhum.

daily afternoon murungai keerai and small onion add pani ghee la vadhakki sapdanum.daily afternoon neraya onion serthu omlet(egg) senju sapdanum.one week'ku 3 kg small onion samayal la serthu samachu sapdanum.

daily night 1 litre or 1/2 litre milk la murungai poo pottu sunda kaaychi vellam or karupatti or panagharkandu serthu sapdanum.dinner simple'a edhavathu saptanum.apram sevvaalai palam and milk sapdanum.

idha elaam daily correct'ah follow pannanum.konjam kastamaana velai thaa.oru naal vidaama sapdanum.kandippa 100% sure sperm count,motility increase aahum.

boys chicken,paavakkaai,elumichai,puli,ahathi keerai,maangaai sapda koodathu.

உங்கள் இதே கேள்வியை சமீபத்தில் படித்ததும், அதற்கு சகோதரிகள் பதில் சொல்லியிருந்ததும் நினைவுக்கு வந்தது. தேடினேன். இதோ அந்த‌ இழை. http://www.arusuvai.com/tamil/node/32022

என்ன‌ நடக்கிறது!! யார் நீங்கள்? எப்படி அதே சந்தேகம் மீண்டும்!!

இருவருக்கு ஒரு பிரச்சினை வருவது உண்டுதான். திரும்ப‌ அதே... //அதனால‌ என் கணவருக்கு இயற்க்கை உணவு ( பாதம் பருப்பு, அத்தி பழம், செவ்வாழை பழம், மாதுளம் பழம் ) குடுக்குறேன் இது போதுமா// இதுவும் கூட‌ அப்படியே இருக்குமா!!!

நீங்கள் சங்கீயாக‌ இல்லாமல் இன்னொருவராக‌ இருக்கலாம். தமிழில் தட்டச்சு செய்ய‌ இயலாமலிருந்தால் கூட‌... இழையைப் பிடித்து காப்பி செய்து எடிட் செய்திருக்கிறீர்கள். அங்கும் பதில்கள் இருக்கின்றனவே! அது உங்களுக்குப் பயன்படவில்லையா! அப்படியானாலும் அங்கேயே மீண்டும் உங்கள் மீதி சந்தேகங்களை வைத்திருக்கலாம். அந்தச் சகோதரிக்கும் உதவியிருக்கும். பதில் சொல்லும் சகோதரிகளும் ஏற்கனவே அதே பதில் இழையிலிருந்திருந்தால் அவற்றைச் சொல்லாமல் வேறு தீர்வுகளைச் சொல்லுவார்கள்.

ஏன் இன்னொரு இழை! பாஸ்வர்ட் மறந்துவிட்டீர்களா? அதை மாற்றவும் வழி இருக்கிறதே! இல்லாவிட்டாலும் அதே இழையின் கீழ் கேட்டிருக்கலாம். பரவாயில்லை, இனிமேல் இப்படி ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பதில் சொல்வதற்கு, முதலில் கேள்வியைப் படிப்பவர்களுக்கு உங்கள் கேள்வி மேல் நம்பிக்கை வரவேண்டும் சகோதரி. இப்படிச் செய்வதை விட‌ தமிங்கிலத்திலானாலும் சுயமாக‌ உங்கள் கேள்வியைத் தட்டியிருக்கலாம். பலன் கிடைத்திருக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்