தக்காளி தோசை

தேதி: September 4, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (6 votes)

 

பச்சரிசி - ஒரு கப்
தக்காளி - 2
துவரம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
கல் உப்பு - அரை தேக்கரண்டி


 

ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, மிளகாய் வற்றல், துவரம் பருப்பு, தக்காளி போட்டு ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
மிக்ஸியில் ஊற வைத்தவற்றை போட்டு உப்பு, பெருங்காயத் தூள் போட்டு தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு கறிவேப்பிலை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் போட்டு எண்ணெய் தடவி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் முழுவதும் பரவலாக ஊற்றவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி தேய்க்க கூடாது.
மேலே எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
சுவையான தக்காளி தோசை தயார்.
இந்த குறிப்பினை நமக்காக செய்து காட்டியவர், திருமதி. பானுமதி குமரப்பன் அவர்கள். பழமையும், புதுமையும் கலந்த புதுவகை சமையல்கள் செய்வதில் திறன் வாய்ந்தவர். கணவர் மருத்துவர் என்பதால், இவரது தயாரிப்புகளில் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலர் பாக்கவே ரொம்ப‌ இன்வைட்டிங் ஆ இருக்கு..ரொம்ப‌ நாளா செய்யணும்னு ஆசை..இப்ப‌ ட்ரை பண்ணலாம்னு நினைக்கிறேன்..
ஒரே ஒரு சந்தேகம்..அரைச்ச உடனே தோசை வார்க்கலாமா?

அன்புடன்,
கவிதாசிவக்குமார்.

anbe sivam

Nan etha mathiri different a try panninathu Ella.today night ethu than seiyaporaen.thank u

//அரைச்ச உடனே தோசை வார்க்கலாமா?// வார்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

சந்தேகத்தை தெளிவுப்படுத்தியதற்கு நன்றி இமா :‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍)

அன்புடன்,
கவிதாசிவக்குமார்

anbe sivam

Dear banu mam,
dosai is very nice, taste is differ from other dosai. really tasty

Dhosai seithu Patten. Supera iruntathu. Etarku enna side dish vaikalam

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

So cute tips mam

வாவ்..! பார்க்கவே கலர்புல்லா இருக்கு கண்டிப்பா செஞ்சி பாக்கிறேன் மேடம்..