நான் ஐந்து மாத கர்ப்பிணி

நான் ஐந்து மாத கர்ப்பிணி. தலைப் பிரசவமும் இதுவே! எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். நான் தினசரி கடவுளுக்கு மாலை கோர்த்து கொடுப்பது வழமை. ஆனால் எனது அயல் வீட்டார்களோ கோவில் போக கூடாது என்கிறார்கள்! பூ மாலை கட்டலாமா? கோவில் போகலாமா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்

கோவிலுக்கு தாராளமா போகலாம். அந்த‌ காலத்தில் கர்ப்பமானவங்க‌, பிள்ளை பெற்றவங்க‌ வெளிய‌ அதிகம் போக‌ விட‌ மாட்டாங்க‌. காரணம் கண் படும் என்பாங்க‌. உண்மையில் ஏதும் நோய் தொற்றிவிட‌ கூடாது என்று தான் கூட்டம் சேரும் இடங்களையும் பொது இடங்களையும் தவிர்த்திருப்பாங்கன்னு நான் நினைக்கிறேன். இப்ப‌ தான் 9 மாசம் வரை வேலைக்கே போய் வராங்களே. இந்த‌ பயமெல்லாம் மனதில் வைக்காதீங்க‌. உங்க‌ மனசுக்கு மாலை கட்டிக்கொடுடப்பது சுகமா இருந்தா அதை செய்யுங்க‌. கடவுள் அருள் உங்களுக்கும் உங்க‌ பிள்ளைக்கும் கிடைக்கட்டும். ஆனா உட்காரும் பொஷிஷன் பார்த்துக்கங்க‌. அதிக‌ நேரம் உட்கார‌ கூடாது. வயிற்றை அமிக்கினாப்பல‌ குனிஞ்சு உட்கார்ந்து பூ கட்ட‌ வேண்டாம். நல்லா நிமிர்ந்து உட்கார்ந்து முடியும் அளவு மட்டுமே செய்யுங்க‌.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா! உங்களின் பதில் என்னை சந்தோசபடுத்தியது!

எங்க‌ ஊர்லையும் அப்படி சொல்வாங்க‌.ஒரு குறிப்பிட்ட‌ மாதத்திற்கு பின்பு கோவிலுக்கு போகக்கூடாது..தேங்காய் பழம் உடைக்க‌ கூடாது. அது மாரி காதுகுத்து மொட்டை போட‌ மாட்டாங்க‌.(அதாவது முக்கியமாக மாமியார் விட்டு வழியில்) இது எங்க‌ ஊர் வழ்க்கம்.அதனால் உங்களுக்கு தெரிஞ்ச பெரிவங்களிடம் கேட்டு கொள்ளுங்கள்.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

//ஒரு குறிப்பிட்ட‌ மாதத்திற்கு பின்பு கோவிலுக்கு போகக்கூடாது.// & //காதுகுத்து மொட்டை// இப்படிச் சொன்னதற்கு நிறையக் காரணங்கள் இருந்தன‌. வேறு இழைகளில் பேசி இருப்பதாக‌ நினைவு. காலம் மாறிப் போனாலும் சில நம்பிக்கைகளுக்கான‌ காரணங்கள் வேறு விதத்தில் பொருந்திப் போய்விடுகிறது.

//இப்போதும் சிலது தேங்காய் பழம் உடைக்க‌ கூடாது.// ம்... தற்செயலாக‌ உள்ளே கெட்டுப் போய் இருந்துவிட்டால் மனம் பலதையும் யோசித்துக் கவலை கொள்ளும். போதாததற்கு சுற்றமும் ஏற்றி விடும். உடைக்காமலே இருந்துவிட்டால் பிரச்சினை இல்லை அல்லவா! :‍)

என்னைக் கேட்டால்... தாங்களாக‌ சரி பிழை யோசித்து முடிவெடுத்து நடக்க‌ இயலுமானால் & யார் என்ன‌ சொன்னாலும் சட்டென்று கவலைப் படாமல், காரண‌ காரியம் ஆராய்ந்து பதில் சொல்லக் கூடிவரானால் தனக்குப் பிடித்தது போல் இருக்கலாம். அவர்களால் சமாளிக்க‌ முடியும்.

இப்படி ஆகுமோ, சரியாக‌ இருக்குமோ என்று பயப்படுகிற‌ ஆட்கள்... தங்கள் மன‌ ஆறுதல் கருதி, தாங்கள் பயப்படும் விடயங்களைச் செய்யாமல் இருப்பது நல்லது.

‍- இமா க்றிஸ்

அன்புள்ள‌ நிமலெனுக்கு.இறையருளால் நன்முறையில் தாயாக‌ வாழ்த்துக்கள்.
இறைவனுக்கு மாலைகோர்த்துக் கொடுப்பது நல்லதே. பூக்களில் சிலவற்றில்
கண்ணுக்குத் தெரியும் தெரியாத‌ புழு பூச்சிகள் இருக்கும். அவை கடித்தாலோ,
நக்கினாலோ விஷமல்லவா, அதனால் தான் பிள்ளை பெற்ற‌ தாய்மார்கள் குழந்தைக்கு ஒரு ஆண்டு ஆகும் வரை பூச்சூடக் கூடாது என்பது. அது குழந்தையையும் தாக்கும். அதிலும் தாழம்பூவை மணப்பெண்களுக்குச் சூட்டவே
சிலர் தயங்குவர். காரணம் தாழம்பூவில் ஒரு அங்குல‌ நீளத்தில் செந்நிறத்தில்
பூநாகம் இருக்கும்.அது கடித்தால் பத்து நிமிடத்தில் மரணம் என்பர். பூவை
முகரும்போது மூக்கினுள்ளே போய்விடும். அதுவும் ஒரு காரணம்
கோவிலுக்குப் போகலாம் தவறு இல்லை.ஆனால் தனியாகப் போககூடாது.
துணையோடல்லது நெடுவழி போகேல். கோவிலின் ஆரவாரம், சாம்பிராணி
புகை, தேங்காய் உடைக்கும்போது தேங்காய்ச் சில்லு உடைந்து மேலே
தெறித்தல் அது படாத‌ இடத்தில் ப‌டக் கூடிய‌ நிலை.நீண்ட‌ ப்ராகாரங்களைச்
சுற்ற‌ வேண்டிய‌ நிலை. கோவிலுக்காக‌ முடியாத‌ நிலையிலும் உணவு உண்ணாமலும் விரதம் என்று பட்டினி கிடந்து கோவிலைச் சுற்றுவது. இன்ன‌
பிற‌ காரணங்களால் அதிக‌ இரத்த‌ அழுத்தம், மன‌ அழுத்தம் அதனால் ஏற்படும்
மயக்கம் இவையே தனியாகக் கோவிலுக்கு போகக் கூடாது என்று சொல்வதற்கான‌ காரணங்கள். வேறு அதிகமான‌ காரணங்கள் இருப்பதாகத்
தெரிய‌ வில்லை.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

அழகாகப் பதில் சொல்லியிருக்கிறீர்கள். இனி இது பற்றி கேள்வி கேட்ட சகோதரிக்கு எந்தச் சந்தேகமும் வராது. நிம்மதியாக‌ இருப்பார். மிக்க‌ நன்றி சகோதரி.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்