சிக்கன் மஞ்சூரியன்

தேதி: September 7, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

சிக்கன் - 500 கிராம்
முட்டை - ஒன்று
கார்ன் ஃப்ளார் - 6 தேக்கரண்டி
மைதா - 2 தேக்கரண்டி
65 மசாலா - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
டொமேட்டோ சாஸ் - 4 தேக்கரண்டி
சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு - சிறிது
குடைமிளகாய் - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
கொத்தமல்லித் தழை - சிறிது
எண்ணெய்


 

ஒரு பாத்திரத்தில் கார்ன் ஃப்ளார், மைதா, முட்டை, 65 மசாலா, இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு உப்பு மற்றும் சிக்கன் சேர்த்து நன்றாகக் கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி மசாலாவில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளைப் போட்டுப் பொரிக்கவும்.
பொன்னிறமாகப் பொரிந்ததும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் குடைமிளகாய் இரண்டையும் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் அரை பதமாக வதங்கியதும் சாஸ் வகைகள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும்.
சாஸ் வகைகள் ஒன்றாகச் சேர்ந்து கெட்டியான பதம் வந்ததும் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளைச் சேர்த்து பிரட்டி எடுக்கவும்.
கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

வெங்காயத் தாள் கிடைத்தால் சேர்த்துக் கொள்ளலாம்.

க்ரேவி போல் வேண்டுமெனில் சாஸ் சேர்க்கும் போது சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டு சிக்கனைச் சேர்த்து பிரட்டி எடுக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை வெளியிட்ட‌ டீமிற்கு நன்றி.

அருமை வாழ்த்துக்கள் பா... விருப்பப்பட்டியல்ல சேர்த்துடேன்

நன்றி manju

I love this dish. i tried myself, that was realy super i enjoyed myself thanks for the recipe