கறிவேப்பிலை தோசை

தேதி: September 8, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (4 votes)

 

புழுங்கல் அரிசி - ஒரு கப்
பச்சரிசி - ஒரு கப்
கறிவேப்பிலை - 20 கொத்து
மிளகாய் வற்றல் - 8
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி


 

புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசி இரண்டையும் 2 மணிநேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் ஊற வைத்த அரிசி, மிளகாய் வற்றல், சீரகம், உப்பு கறிவேப்பிலை போட்டு தோசை மாவு பதத்தில் அரைக்கவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் சுற்றிலும் ஊற்றி பரப்பி விடவும்.
மேலே எண்ணெய் ஊற்றி 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து விடவும்.
பூண்டு சட்னி மற்றும் பூண்டு பொடியுடன் சூடாக சாப்பிடவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹா சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. நன்றி ட்ரை' பண்றேன்....

Thiruvasagam

Hai Friends Nan Ippo 50 days pregenant enna suthi romba problem ha iruku enaku help panunga

Thiruvasagam

Congratulations divyaa,mind relax vaithu rest edunga,ungaluku 30 days la symptoms therintha friend

Hii sujatha sister intha dosaiku mavu aati udane dosa sudalama.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

கறிவேப்பிலை தோசை மிகவும் ஈசியாகவும் அருமையாகவும் உள்ளது.தோழி சங்கீதா அவர்களே இந்த மாவும் நாம் அரைக்கும் இட்லி மாவு போல புளிக்க வைத்து தான் பயன்படுத்த வேண்டும் என நினைக்கின்றேன்.