சக்கரைவள்ளிக்கிழங்கு தோசை

தேதி: September 9, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

சக்கரைவள்ளிக்கிழங்கு - 200 கிராம்
தோசை மாவு - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு


 

கிழங்கை தோல் சீவி சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து தோசை மாவில் ஊற்றி கலந்துக் கொள்ளவும்.
தோசை கல் சூடானதும் எண்ணெய் தடவி தோசையாக ஊற்றவும்.
தோசை சிவந்ததும் திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
சுவையான எளிதாக செய்யக்கூடிய கிழங்கு தோசை தயார்.

இந்த மாவில் வெங்காயம், கடுகு தாளித்து சேர்த்தும் ஊற்றலாம்.

சக்கரை சேர்த்து இனிப்பு தோசையாகவும் ஊற்றலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை வெளியிட்ட‌ டீமிற்கு நன்றி.