வாழைக்காய் புளி வறுவல்

தேதி: September 12, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

வாழைக்காய் - ஒன்று
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தனி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - முக்கால் தேக்கரண்டி


 

வாழைக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியுடன் தண்ணீர் ஊற்றி கரைத்து அரை கப் புளி கரைசல் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைக்காயை போட்டு மஞ்சள் தூள் மற்றும் புளி கரைசலை ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் வேக வைத்த வாழைக்காயை போட்டு அதிகமான தீயில் வைத்து பிரட்டவும்.
5 நிமிடம் கழித்து தீயை குறைத்து வைத்து உப்பு, மிளகாய் தூள் சேர்த்து 4 நிமிடம் பிரட்டி விடவும்.
வாழைக்காய் நன்கு ரோஸ்ட்டாக மாறும்வரை வைத்திருந்து பின்னர் இறக்கவும்.
சுவையான வாழைக்காய் வறுவல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்கவே சூப்பரா இருக்கு.எனக்கு வாழைக்காய் ரொம்ப பிடிக்கும். நல்ல ரெசிப்பி செய்து பார்த்துட்டு சொல்றேன்.........)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி