தோழிகளுக்கு என்னோட சிறு உதவி,.

ம‌ணமாகியும் இன்னும் குழந்தை பேறு கிட்ட‍வில்லையே என்று ஏங்கும் கணவன் மனைவிகளை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். அவர் களுக்கு ஓர் இனிப்பானசெய்தி அதிமதுரம், உலர் திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 – 100 கிராம் எடுத்து தண்ணீஇரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாத விடாய் தொட ங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், 6 ஆவது நாளில் கணவனுடன் தாம்பத் தியம் கொள்ளும் பெண்ணுக்குக் கருத்தரிக்கும். சில பெண்களுக்கு இது தாமதப்படலாம். அவர் கள் சோர்ந்து போகாமல் கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள்வரை இதுபோன்றே சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை கூடிய விரைவில் எதிர்நோக்க‍லாம் .......இவை நெட்டில் சர்ச் பன்னுனதுல கிடைத்த தகவல்.

ஆண் பெண்களுக்கு மலட்டுத் தன்மை இருந்தாலும், ஆண்களுக்கு குழந்தையை உற்பத்தி செய்யக் கூடிய உயிர் அணுக்கள் குறைவு பட்டிருந்தாலும் இம்முறையை பயன்படுத்தினால் நிச்சயம் பலன் உண்டு.

வாழை மரத்தின் அடித் தண்டை அறுத்து அதில் குழி செய்து, அதில் கொஞ்சம் நவச்சாரம் பொடி போட்டு அதை நன்றாகப் பாதுகாப்புடன் மூடி, காலையில் வாழைத் தண்டில் ஊறிய நீரை எடுத்து ஆண் பெண் இரு பாலரும் வெறும் வயிற்றில் தொடர்ந்து சுமார் 2 மாதங்கள் குடித்து வந்தால் நிச்சயமாக குழந்தைச் செல்வம் உண்டாகும்

அன்புள்ள‌ திவ்யாவிற்கு நீங்கள் கொடுத்த‌ இந்தக் குறிப்பு எப்படிக் கிடைத்த‌து
தகவல் தந்தால் மிகவும் நன்றியுடையவளாக‌ இருப்பேன்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

:‍) இது தப்பு சகோதரி.

வேறு தளத்தில் இருப்பதை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணுறதுதான் உதவியா? //நெட்டில் சர்ச் பன்னுனதுல கிடைத்த தகவல்.// இது போல‌ பண்ணுறதை... 'ஈயடிச்சான் காப்பி' என்பாங்க‌. அறுசுவையைத் தேடி வரத் தெரிஞ்சவங்களுக்கு வேற‌ வலைத்தளங்களைத் தேடிப் படிக்கிறது ஒன்றும் சிரமமான‌ காரியம் இல்லை. உங்கள் சொந்த‌ மொழிநடையில் கொடுத்திருந்தால் பரவாயில்லை.

நீங்கள் செய்யக் கூடிய‌ பெரிய‌ உதவி... அறுசுவை நிபந்தனைகள், மன்ற‌ விதிமுறைகள் எல்லாவற்றையும் முழுமையாகப் படிக்கிறது & இனிமேல் இப்படிப் பண்ணாமல் இருப்பது.

‍- இமா க்றிஸ்

உங்களுக்கு அறுசுவை open ஆச்சா? என்ன காரணம் அம்மா இங்கெல்லாம் Open ஆகல....)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

//உங்களுக்கு அறுசுவை open ஆச்சா?// ஒவ்வொரு ஆளாக‌ எல்லோரிடமும் கேட்கப் போகிறீர்களா? :) //இங்கெல்லாம் Open ஆகல// ஒப்பன் ஆனதால்தானே இப்போ கேள்வியை வைத்திருக்கிறீர்கள்? என்ன‌ கேட்கிறீங்க‌ என்பது புரியுது. சில‌ சமயம் இப்படி ஆவது உண்டுதான். ஓரிரு நாட்களுக்குள் சரியாகிவிடும்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி அம்மா //ஒவ்வொரு ஆளாக‌ எல்லோரிடமும் கேட்கப் போகிறீர்களா?//எல்லோரிடமும் கேக்கல ஒருத்தர்கிட்ட கேட்டேன் அவங்களுக்கும் ஓபன் ஆகலையாம்.சரி வெளிநாடுகளில் ஓபன் ஆச்சானு கேக்கலாமேன்னு உங்ககிட்ட கேட்டேண்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

மேலும் சில பதிவுகள்