பரங்கிக்காய் இனிப்பு கறி

தேதி: September 14, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

பரங்கிக்காய் - 250 கிராம்
வெல்லத் தூள் - கால் கப்
தேங்காய் துருவல் - கால் கப்
ஏலக்காய் - 3
கலர் பவுடர் - ஒரு சிட்டிகை


 

பரங்கிக்காயைச் சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடி செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் பரங்கிக்காய்த் துண்டுகளைப் போட்டு 5 நிமிடங்கள் வேகவிடவும்.
தண்ணீர் கொதித்து, சற்று வற்றியதும் அதில் வெல்லத் தூளைச் சேர்த்துக் கிளறி கரையவிடவும்.
அதனுடன் தேங்காய் துருவல், கலர் பவுடர், ஏலக்காய்ப் பொடி சேர்த்து 5 நிமிடங்கள் கிளறவும்.
நன்கு கிளறிவிட்டு திரண்டு வரும் போது இறக்கிவிடவும்.
சுவையான பரங்கிக்காய் இனிப்பு கறி தயார்.
பிராமண சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள திருமதி. ரங்கநாயகி ராஜகோபாலன் வழங்கிய குறிப்பு இது. மாதர் சங்கத் தலைவி, சமூக சேவகி, நல்ல குடும்பத்தலைவி என்று பல முகங்களை உடைய இவர், அறுசுவை நேயர்களுக்கு ஏராளமான பிராமண உணவுகள் தயாரிப்பை செய்து காட்டவுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஐந்தே ஐந்து பொருட்களைச் சேர்த்து அருமையான‌ குறிப்பு! பிடித்திருக்கிறது. சமைத்துப் பார்ப்பேன்.

‍- இமா க்றிஸ்