கொழுக்கட்டை

தேதி: September 16, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

அரிசி மாவு - ஒரு கப்
கடலைப்பருப்பு - அரை கப்
வெல்லம் - 250 கிராம்
தேங்காய் துருவல் - முக்கால் கப்
ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி
கல் உப்பு - கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

கடலைப்பருப்பை நசுக்கும் பதமாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடலைப்பருப்பு வெந்ததும் மிக்ஸியில் போட்டு ஒரு முறை சுற்றி எடுத்து விடவும்.
வாணலியில் தேங்காய் துருவலை போட்டு குறைந்த தீயில் வைத்து வாசம் வரும் வரை வறுத்து எடுக்கவும்.
அதே வாணலியில் அரைத்த கடலைப்பருப்பை போட்டு சிறிது நேரம் பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லம் கரைந்ததும் வறுத்த கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
மேலே ஏலக்காய் பொடி தூவி கலவை திக்காகும் வரை கிளறி இறக்கி வைக்கவும். பூரணம் ரெடி.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கால் தேக்கரண்டி கல் உப்பு போட்டு கொதிக்க விடவும்.
கொதித்ததும் மாவை கொட்டி தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி கிளறவும். மாவை மற்றொரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு கையால் அல்லது ஏதேனும் கிண்ணத்தின் பின்புறத்தால் பிசையவும். பிசையும் போது மாவு கையில் ஒட்டாமல் வரும்.
பிசைந்த மாவிலிருந்து ஒரு எலுமிச்சை அளவு மாவை எடுத்து வாழையிலையில் எண்ணெய் தடவி அதில் வைத்து தட்டவும். அதன் நடுவில் பூரணத்தை வைத்து மூடி விடவும்.
இதே போல் எல்லா மாவிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.
இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து இட்லி தட்டில் கொழுக்கட்டைகளை அடுக்கி வேக வைத்து எடுக்கவும்.
சுவையான பூரணக் கொழுக்கட்டை தயார். உள்ளே வைக்கும் பூரணங்கள் விருப்பத்திற்கேற்ப எதுவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

செய்து பார்த்தேன் நன்றா௧ இருந்தது

ML