10month baby help me pls

En kulanthaiku 10matham agirathu. Orundai than sapidugiral.atharku Mel Sapidumpothu vomit pannuvathu pola ovow ovow nu seira.ithai niruthi nangu sapida vali sollungal tholigale. Sila time sapidumpothe vomit seira. Help me pls

அன்புள்ள‌ சங்கீதா
நீங்கள் எந்த‌ வகுப்பு ஆசிரியை என்று தெரிந்தால் நல்லது.
உங்கள் குழந்தையோடு அமர்ந்து உணவுண்ண‌ இயலுமானால்மிக‌ மிக‌ நல்லது.
உருண்டை எவ்வளவு பெரியது 100 ? 200? கிராம் அளவுள்ள‌ கப் அளவா அல்லது
கோலிகுண்டு சைஸா அது புரியவில்லை. ஊட்டுவது ஸ்பூனாலா கையாலா?
குழந்தையின் உணவை முதலில் நீங்கள் சுவைத்துப் பார்த்தபின் ஊட்டுங்கள்.
கையினால் ஊட்டுவதுமிக நல்லது தேவையானதுமாகும். சில‌ நேரங்களில்
உணவை சுண்டைக்காய் சின்ன‌ கோலிக்குண்டு அளவுகளாக‌ உருண்டையாக்கி
அதன் தலையில் நெய்பருப்பு சோறானால் கடைந்த‌ கீரை, காய்கறிகள் விதவிதமாக,பொன்னிறமாக‌ வறுத்த‌ காரமேஇல்லாத‌ கிழங்குவகைகள்.
தயிர்சாதமானால் தோல் நீக்கிய‌ பழத்துண்டுகள் பிடித்தமான‌ ப்ழவகைகள்
ராஜா தலையிலே தொப்பி என்பது போல‌ சொல்லிச் சொல்லி சாப்பிட
வையுங்கள். சின்னத் தட்டில் இரண்டிரண்டு உருண்டைகளாக‌ வைத்து
தானே எடுத்து சாப்பிட‌ விடுங்கள், பாதி வாயிலே பாதி பூமித்தாய்க்கு ஜே தான்
வலைத்தளத்தில் குழந்தை பற்றிய‌ பாட்டு "படைப்புப் பல‌ படைத்து.....
படித்துப் பாருங்கள். உள்ளே சென்று நன்கு தேடுங்கள் நிறையக் கிடைக்கும்
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்