தேதி: September 21, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மீந்துபோன அடைமாவு - ஒரு கப்
கேரட் - ஒன்று
ஊறவைத்த ரவா - கால் கப்
உப்பு - கால் தேக்கரண்டி
அரிசிமாவு - ஒரு மேசைக்கரண்டி
கார்ன்ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு கப்
கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். ரவாவை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். மற்றப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மீந்துப்போன அடைமாவுடன் துருவிய கேரட், ஊற வைத்த ரவா மற்றும் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கலந்துக் கொள்ளவும்.

இவற்றை ஒன்றாக கலந்தப் பின்னர் மாவு கெட்டியாக அதனுடன் கார்ன்ஃப்ளார் மற்றும் அரிசிமாவு இரண்டையும் கலந்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக கிள்ளி போடவும்.

இருப்பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும். எல்லாமாவையும் இதுப்போல் பொரித்து எடுக்கவும்.

அடைமாவு பக்கோடா தயார்.

Comments
செண்பகா அக்கா
ஒருநாள் செய்து பார்த்துட்டு கமெண்ட் போடுறேன் ரொம்ப நல்லா இருக்கு.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி