3 வயது மகள் உடல் முழுதும் முடி வளர்ச்சி உதவுங்கள் தோழிகளே

என் மகளுக்கு (3 வயது ) 3 வருடங்களாகவே கஸ்துரி மஞ்சள் தேய்த்து தான் குளிக்க வைத்து வருகிறேன் இருந்தாலும் உடம்பு கை கால் முதுகு அதிகமாக முடி வளர்ச்சி உள்ளது கொட்டவே மாட்டேன்குது பிறந்த போதிலே இருந்து முடி இருகின்றது. வேறு ஏதேனும் வழி முறைகள் உள்ளத ?

//அதிகமாக முடி வளர்ச்சி// இந்த‌ 'அதிகம்' என்கிற‌ வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு கருத்துச் சொல்ல‌ இயலாது சாரா. குழந்தையைப் பார்த்தால்தான் நீங்கள் சொல்வதன் உண்மை அர்த்தம்... எனக்கு தெளிவாகச் சொல்லத் தெரியவில்லை, பிரச்சினையின் தீவிரம் புரியும்.

முகத்தில் கன்னம் ஒற்றைக் கன்னம் முழுவதும் தலையில் உள்ளது போல‌ அடர்த்தியாக‌ முடி வளர்ந்த‌ பிள்ளை ஒருவரை இங்கு கண்டிருக்கிறேன். இன்னொரு குழந்தை... முன்பு முகம் கைகளில் அசாதாரண‌ முடி வளர்ச்சி இருந்ததாகச் சொன்னார்கள். அவர் மருத்துவ‌ சிகிச்சை பெற்றிருந்தார்.
//பிறந்த போதிலே இருந்து முடி இருகின்றது.// அப்படியானால் பிரசவத்தைத் தொடர்ந்து குழந்தையை மருத்துவமனையில் பார்த்த‌ மருத்துவர்கள் எதுவுமே சொல்லவில்லையா!! அவர்கள் இது பற்றிப் பெரிதாக‌ எடுக்கவில்லையானால் அது பெரிய‌ பிரச்சினையாக‌ இராது என்று தோன்றுகிறது. இது உங்கள் மனதைக் கவலைப்படுத்தும் விடயமாக‌ இருந்தால் ஒரு நல்ல‌ மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறுவது நல்லது.

‍- இமா க்றிஸ்

நன்றி அம்மா

மேலும் சில பதிவுகள்