சிக்கன் குழம்பு

தேதி: September 25, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

சிக்கன் - கால் கிலோ
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 2
கறி மசாலா - 3 மேசைக்கரண்டி
தேங்காய் விழுது - கால் கப்
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் - கால் கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - 2 கொத்து
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி
பூண்டு விழுது - 2 தேக்கரண்டி


 

சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளியை நீளவாக்கில் நான்கு துண்டுகளாக நறுக்கவும். பச்சைமிளகாய் இரண்டாக கீறிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு, தக்காளி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மல்லித்தூள், கறிமசாலா, நறுக்கிய வெங்காயத்தில் பாதி அளவு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் ஒரு நிமிடம் வதங்கியதும் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
அதில் கரைத்து வைத்திருக்கும் சிக்கன் கலவை ஊற்றவும். பிறகு அதனுடன் 3 கப் தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் வைத்திருக்கவும்.
குழம்பை மூடி வைத்து 15 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு தேங்காய் விழுது சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி வேக விடவும்.
5 நிமிடம் கொதித்ததும் குழம்பை இறக்கி விடவும்.
சுவையான சிக்கன் குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்