அமாவாசையில் பிரசவ தேதி

வணக்கம், எனக்கு இப்போது 9 வது மாதம். முதல் குழந்தை ஆபரேசன் என்பதால் இரண்டாவதும் ஆபரேசன் தான் அதனால் 10 தேதிக்கு பிறகு தேதி குறித்து விட்டு வாங்கனு சொல்லிட்டாங்க. இப்ப பிரச்சனை என்னனா 12 ம் தேதி பார்த்து இருக்காங்க. ஒருத்தர் அன்னைக்கு மஹாலய அமாவாசை அதனால வேண்டாம் என்கின்றனர். ஒருத்தர் அமாவாசை அன்று பிறந்தால் குழந்தை அதோட வாழ்க்கையில் நன்றாக இருக்கும் னு சொல்றாங்க. எனக்கு குழப்பமா இருக்கு அன்னக்கு ஆபரேசன் வச்சுக்கலாமா. இது பற்றி தெரிந்தவர்கள் ப்ளீஸ் சொல்லுங்களேன்.

நீங்கள் மற்றவர்கள் சொல்லுவதை கேட்பதை விட உங்களுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இருந்தால் அவர்களிடமே நாள் குறித்து தர சொல்லலாம்.என் வீட்டின் எதிரில் ஒரு ஜோதிடர் இருக்கிறார் அவரிடம் இந்த மாதிரி நாள் குறித்து விட்டு ஆபரேஷன் செய்பவர்கள் அதிகம்.உங்களுக்கு தெரிந்த ஜோதிடர் அல்லது உங்கள் முதல் குழந்தைக்கு ஜாதகம் எழுதியவரிடம் கூட கேட்டு வர சொல்லலாம். நமக்கும் மன ஆறுதலாக இருக்கும்.நீங்கள் போக வேண்டிய அவசியம் இல்லை.உங்கள் கணவரையோ அல்லது அம்மா அத்தையை கூட போக சொல்லலாம்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

அன்புள்ள‌ பிருந்தாவிற்கு இறையருளால் சுகப்பிரசவமே நடக்க‌ இறைவனை
வேண்டுகிறேன். இடையே 15 நாள்கள் உள்ளன‌. இறைவனை வேண்டுங்கள்.
மழைப் பேறும் மகப்பேறும் எப்போது என்பதை அவனே அறிவான். எனவே
இறைவனே நல்ல‌ நாளிலே சுகப்பிரசவம் ஆகவேண்டும் இறைவா என்
குழந்தையின் எதிர்காலம் நன்றாக‌ அமைய‌ உன்னையே நம்புகிறேன் என்று
ஒப்படைத்து விடுங்கள், அவர் பார்த்துக் கொள்வார் என்று நம்புங்கள்.
பாரத்தினை இறைவன் பாதத்தில் இறக்கி வைத்து விடுங்கள். நிம்மதியாக‌
இருக்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்