ஆரம்ப கர்ப்ப காலத்தில்

ஆரம்ப கர்ப்ப காலத்தில்,வாந்தி,உடல் சோர்வு,மயக்கம்,சரியாக தேனில் மிளகு சேர்த்து காய்ச்சி குடிக்கலாம?

ஹாய் மஞ்சுளா! :‍) அறுசுவைக்கு நல்வரவு _()_
ஆரோக்கியமான‌ உணவாகச் சாப்பிடுங்கள். சோர்வாக‌, மயக்கமாக‌ இருக்கும் சமயம் கொஞ்சம் ஓய்வு எடுங்கள். தேன் பற்றிய‌ சந்தேகத்திற்கு... சகோதரிகள் வரும் வரை கொஞ்சம் பொறுத்திருங்க‌.

நீங்கள் புதியவர் என்பது தெரியும். முடிந்தால் கமாவைத் தொடர்ந்து அடுத்த‌ சொல்லைத் தட்டாமல் இடையில் ஒரு ஸ்பேஸ் தட்டி விடுறீங்க‌ளா?

‍- இமா க்றிஸ்

Hi manjula...... hearty congrats for ur pregnancy......take full rest ma....don't try home remedies.. just eat pomegranate fruit......loin dates.......

அன்புள்ள‌ மஞ்சுளாவிற்கு தேனை சூடு படுத்தாமல் பயன்படுத்துவது தான்
அதன் இயல்பான மருத்துவப் பயனை நாம் அடைய‌ உதவும். வாந்தி மயக்கம்
சோர்வு நீங்க‌ புளிப்பான‌ காய்ந்த‌ திராட்சை, ஆல்பகோடா பழம், உப்பிட்ட‌
நாரத்தங்காய் ஊறுகாய் (உணவோடு தொட்டுக்கொண்டு உண்டால் உண்ணும் உணவு நன்கு சீரணமாவதோடு வாந்தியும் வராது உப்பிட்ட‌ மாங்காய் / மாதா
ஊட்டாத‌ சோற்றை மாங்காய் ஊட்டும்/சுண்டைக்காய் வற்றல் வறுத்து பொடித்து
சுடுசோற்றோடு நெய்யும் உப்பு தேவையானால் (சுண்டைக்காயிலேயே உப்பு
இருக்கும்) சேர்த்துக் கலந்து உண்ண‌ நாவிற்கும் உடம்பிற்கும் மிகவும் நல்லது
சுக்குக் காப்பியில் தேன் பால் கலந்து குடிக்கலாம். காய்ச்சிய‌ மிளகு கசாயத்தில்
தேன் கலந்து குடிக்கலாம். ஆட்டோ சவாரியும் மோட்டார் பைக் சவாரியும்
ஆறு மாதம் வரையில் கட்டாயம் தவிர்ப்பது மிக‌ மிக‌ நல்லது.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

போதுமான ஓய்வு, தண்ணீர் அதிகமாக குடிங்க, ஆரம்பத்தில்
எடுக்கும் ஓய்வு குழந்தை வளர்ச்சி க்கு ரொம்ப நல்லது. புதினா துவையல் வாந்தி,மயக்கம், குமட்டல், ஆகியவற்றை நிறுத்தும்.
முயற்சி செய்யவும்.

மேலும் சில பதிவுகள்