பட்டாணி பக்கோடா

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பட்டாணி - கால் கிலோ
அரிசி மாவு - ஒரு மேசைக்கரண்டி
கடலைமாவு - 6 கப்
பெரிய வெங்காயம் - 3
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

பட்டாணியை வாணலியில் சிறிது வறுத்துக் தண்ணீரில் உடனே ஊறப் போடவும்.பிறகு ஊறிய பட்டாணியை வடிகட்டியில் வடிகட்டவும்.
கடலைமாவு, அரிசிமாவு இரண்டையும் சலித்து, ஒன்றாய் சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
அத்துடன் உப்பு, காரப் பொடி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பக்கோடா போடும் பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு நன்கு காய்ந்தவுடன் தீயை சற்று குறைத்து, ஊறி வடிக்கட்டிய பட்டாணியை மாவுக்கலவையில் போட்டு நன்கு புரட்டி எடுத்து எண்ணெயில் போடவும்.
லேசாக சிவக்கவிட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்