மனசு சரியில்லை கவலையாக உள்ளது தோழிகளே

ரொம்ப கவலையாக உள்ளது எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வந்துக்கொண்டே இருக்கிறது சின்ன சின்ன விசயத்தில் கூட இன்றைக்கி சண்டை பெரிதாகிவிட்டது என் கணவர் என் அம்மா வீட்டுக்கு போக சொல்கிரார் என் அம்மாவுக்கு வேற உடம்பு சரியில்லை இந்த விசயம் மட்டும் அவுங்களுக்கு தெரிந்தால் ரொம்ப கவலை படுவாங்க. எனக்கு ஆறுதல் கூறுகள் தோழிகளே

Hi asmabeevi sandai ku enna karanam endru athai sari panna parunga. Ethunala sandai varuthu yar mela thappu endru koncham yositchu parunga pin athai sari panna muyarchi panunga tholi. Unga husband than endral santhosama irukkum pothu itha pathi pesi koncham konchama ungala purinchuka vaikka muyarchi panunga. Innikku kopathula amma vitukku porathala unga sandai thira porathu illa tholi piratchanai melum perithaka vaippu athikam irukku so poka vendam pa. Inga irunthey problem solve panna parunga.

Ok pa thanks for your advice

//Innikku kopathula amma vitukku porathala unga sandai thira porathu illa tholi piratchanai melum perithaka vaippu athikam irukku so poka vendam pa. Inga irunthey problem solve panna parunga.// இதைத் தான் நானும் சொல்ல வந்தேன்.

ஒரு கை மட்டும் சத்தம் போடாது. இரண்டு கைகள் தட்டினால்தான் சத்தம் வரும். //எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வந்துக்கொண்டே இருக்கிறது// :) உங்கள் கணவர் சண்டை போடுகிறார் என்று சொல்லாமல் நீங்களும் சண்டை பிடீக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு உண்மை நிலை புரிகிறது. நல்ல விஷயம்.

//சின்ன சின்ன விசயத்தில் கூட// சின்ன விஷயம் என்று தெரியும் போது நீங்கள் விட்டுக் கொடுக்கலாம் இல்லையா! சந்தோஷமாக இருக்க வேண்டுமானால், ஈகோ எல்லாம் பார்க்கக் கூடாது.

//என் கணவர் என் அம்மா வீட்டுக்கு போக சொல்கிரார் என் அம்மாவுக்கு வேற உடம்பு சரியில்லை// ஹை! அம்மாவுக்கு மட்டும் உடம்பு சரியாக இருந்திருந்தால் கிளம்பிப் போயிருப்பீங்களா! அப்போ தப்பு உங்கள் மேல்தான். சின்ன விஷயம் என்று தெரியுது. ஆனால் பிடிவாதமா இருக்கீங்க.

//இந்த விசயம் மட்டும் அவுங்களுக்கு தெரிந்தால் ரொம்ப கவலை படுவாங்க.// இல்லையா பின்னே! கஷ்டப்பட்டு வளர்த்து நல்ல இடம் பார்த்துக் கட்டிக் கொடுத்த பின்னால் சின்னச் சண்டைக்கு திரும்ப வீட்டுக்கு வர நினைத்தால் எப்படி சந்தோஷப்படுவாங்க? உடம்பு இன்னும் மோசமாகும்.

//ரொம்ப கவலையாக உள்ளது// நீங்கள் கவலைப்பட வேண்டியது... எது சரி, எது தப்பு என்று தெரிந்தும் உங்களை மாற்றிக் கொள்ள முடியாமலிருப்பது பற்றித் தான். மாற‌ முயற்சி செய்யுங்கள்.

//எனக்கு ஆறுதல் கூறுகள் தோழிகளே// இருவர் மேலும் தப்பு 50:50 என்று தெரிகிறது. நாங்கள் 'சொல்லும்' ஆறுதல் தற்காலிகமான‌ விடயம்; உங்களுக்கு ஒரு போலி 'ஆறுதலை' வேண்டுமானால் அது கொடுக்கலாம். அதனால் நிலமையை மாற்றிவிட‌ முடியாது. உங்கள் வாழ்க்கை இது. நீங்கள் கொஞ்சம் யோசித்து நடந்தால் நிரந்தரமான‌ ஆறுதல் தானாக‌ உங்களைத் தேடி வரும்.

‍- இமா க்றிஸ்

தோழிகள் கூறுவது போல் நீங்கள் அம்மா வீட்டுக்கு செல்வதனால் பிரச்சனை பெரிதாகுமே தவிர‌ தீர்வு கிடைக்காது. ஏனென்றால் தப்பு உங்கள் மேல் இருந்தாலும் கூட‌ உங்க‌ அப்பா அம்மா உங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவங்க‌. அதனால‌ உங்க‌ கணவர் மேல் உங்களுக்கு இருக்கும் கோவம் வெறுப்பாக‌ மாறும். உங்க‌ பெற்றோருக்கும் வருத்தம் அதிகமாகும். என்னடா நாம‌ நம்ம‌ பொண்ணை எப்படிலாம் வளர்த்து கல்யாணம் பண்ணி கொடுத்தோம். இப்படி கஷ்டப்படுறாளேனு இன்னும் உடல்நிலை கெட்டுபோகும். கூடுமானவரை பிரச்சனையை அவர்களிடம் கொண்டு செல்லாமலிருப்ப்தே நல்லது.
தப்பு உங்க கணவர் மேல் இருந்தால் கூட நீங்க கொஞ்சம் விட்டு கொடுங்க‌. சண்டை வருவதற்கன‌ காரணத்தை கண்டுபிடிங்க‌. அவருக்கு பிடிக்காத‌ விசயத்தை பேசாதீங்க‌ செய்யாதீங்க‌. புரிதல், நம்பிக்கை கொஞசம் குறைவாக‌ இருப்பதனால் தான் இப்படி அடிக்கடி சண்டை வரும். எல்லாம் சரியாகிடும் கவலைபடாதீங்க‌. நம்பிக்கையோட‌ இருங்க‌. வாழ்த்துக்கள்.
நன்றி.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

Thanks for advice imma mam and Krishnamercy

இதுவும் கடந்து போகும்" - வாழ்வில் இன்பம் துன்பம் எதுவும் நிரந்தரமல்ல

பருத்திக்காட்டில் தன் பிள்ளைகளுக்கும் சேர்த்து, காய்ந்துபோன பருத்திமார் பிடுங்கியே ரணமான என் தாயின் உள்ளங்கைக் காயங்கள்தான் என்னை உண்மையானவனாக வாழ வழி காட்டின. அவரை ஏமாற்ற, அவருடைய நம்பிக்கையைக் குலைக்கிற தைரியம் எனக்கு எப்போதும் வந்தது இல்லை.
யாரையும் மோசடி செய்யாமல், யாரையும் வஞ்சிக்காமல் ஒழுக்கமான வழிகளில் சேர்க்க முடிந்தது வெறும் ஒற்றை ரூபாயாக இருந்தாலும் அதை மட்டும்தான் உன் பெற்றோருக்கும் காணிக்கையாக்க முடியும். உங்களை நல்ல முறையில் வளர்த்துவிட்டோம் என்கிற நம்பிக்கையே எங்கள் ஆயுள். எந்தச் சூழ்நிலையிலும் ஒழுக்கமாக இருப்பீர்கள் என்று மனப்பூர்வமாக நம்புகிறோம். நீங்கள் ஒழுக்கமாக இருக்கிறிர்களா என்று நிச்சயம் வேவு பார்க்கமாட்டோம். என்னைவிட நீங்கள் அதிகப் பணம் சேர்ப்பதைவிட, என்னைப் போல ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்தால் அதுதான் எனக்குப் பெருமை.
2007 காபி, டீ குடிப்பதைக்கூட நிறுத்திவிட்டேன்.
குடும்பத்தை எதிர்காலத்தில் தூக்கி நிறுத்துவேன். புகை, மது, மாது, சூது பக்கம் நெருங்கமாட்டேன்" என்று அம்மாவிடம் சத்தியம் செய்து கொடுத்துவிட்டு வந்தேன். இன்றுவரை அதைக் காப்பாற்றுகிறேன்.

மேலும் சில பதிவுகள்