கேரட் சட்னி

தேதி: October 5, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

கேரட் - 2
பூண்டு - 5 பல்
காய்ந்த மிளகாய் - 3
வெங்காயம் - 2
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு, காய்ந்த‌ மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கியவற்றுடன் கேரட்டை சிறுத் துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.
நன்கு வதங்கியதும் கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.
அரைக்கும் போது உப்பு சேர்த்து விருப்பப்பட்டால் தேங்காய் சேர்த்து அரைக்கவும். தேங்காய் இல்லாமலும் அரைக்கலாம். (தேங்காய் சேர்த்தால் சீக்கிரம் கெட்டு விடும். தேங்காய் சேர்க்காவிடில் நீண்ட‌ நேரம் நன்றாக‌ இருக்கும்.)
இதை நன்கு மைய‌ அரைத்து இட்லியுடன் பரிமாறவும். சுவையான‌ வித்யாசமான‌ கேரட் சட்னி தயார்.

இதே முறையில் கேரட்டிற்கு பதிலாக‌ முள்ளங்கி (அ) முட்டைக்கோஸிலும் செய்யலாம்.

விருப்பப்பட்டால் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கேரட் சட்னி சூப்பர் ஈவ்னிங் செய்திடலாம். நன்றி

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ டீமிற்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி அபி. செய்துட்டு சொல்லுங்க‌ எப்டி இருந்துச்சினு.

எல்லாம் சில‌ காலம்.....