மல் பூரி

தேதி: February 16, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - 2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
சோடா உப்பு - 1 சிட்டிகை
கேசரி பவுடர் - 1/2 தேக்கரண்டி
தயிர் - 1 கப்
சீனி - 2 1/4 கப்
சுடுவதற்க்கு நெய் அல்லது எண்ணெய் - தேவைக்கேற்ப


 

முதலில் இரண்டு மாவுகளையும் சேர்த்து தயிர் ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து பணியாரமாவு போல் கரைத்துவைத்துக்கொள்ளவும்.

சீனியில் சம அளவு தண்ணிர் சேர்த்து கேசரி பவுடர் சேர்த்து பாகு காய்ச்சிக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் கரைத்த மாவில் இருந்து ஒரு கரண்டி மாவை ஊற்றி வெந்ததும் எடுத்து சீனி பாகில் போட்டு பாகு குடித்ததும் எடுத்து வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்