பீன்ஸ் சப்ஜி

தேதி: October 6, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

பீன்ஸ் - 15
வெங்காயம் - ஒன்று
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - 2
தனியா - அரை மேசைக்கரண்டி
சோம்பு - கால் தேக்கரண்டி
கசகசா - கால் தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
பட்டை - ஒரு துண்டு
புளி - சிறிய கோலிக்குண்டு அளவு
உப்பு - கால் தேக்கரண்டி
வெல்லம் - கோலிக்குண்டு அளவு
தேங்காய் துருவல் - 1 1/2 மேசைக்கரண்டி


 

தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனியா, சோம்பு, பட்டை, கசகசா மற்றும் காய்ந்தமிளகாய் சேர்த்து கருகவிடாமல் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்தப் பொருட்கள் ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு புளியை சேர்த்து நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.
அதே வாணலியில் கால் தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு சேர்த்து மூன்று நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் வதங்கியதும் அதனுடன் நறுக்கிய பீன்ஸை சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
அதில் வறுத்து அரைத்த பொடி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டி விடவும்.
பிறகு பீன்ஸ் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேகவிடவும்.
பீன்ஸ் வெந்து அதிலுள்ள தண்ணீர் வற்றியதும் அரைத்த தேங்காய் விழுதை அதில் சேர்த்து பிரட்டி விடவும்.
தேங்காய்விழுது பீன்ஸுடன் ஒன்றாக கலந்ததும் இரண்டு நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
சுவையான பீன்ஸ் சப்ஜி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பீன்ஸில் இப்படி ஒரு ரெசிப்பிய தான் தேடிட்டு இருந்தேன். தேங்க்யூ அக்கா கண்டிப்பா ட்ரை பண்ணி பார்க்கிறேன்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

சூப்பரா இருக்கு. அருமையான‌ ஈஸியான‌ ரெசிபி.

எல்லாம் சில‌ காலம்.....