தோழிகளே...எனக்கு ஒரு உதவி

தோழிகள் அனைவரும் நலமா. எனக்கு ஒரு உதவி. என் பேத்திக்கு 3வயது ஆகுது.எதுவும் சாப்பாடு சாப்பிடமாட்டேங்கிறா.ஜூஸ் பால்.பழம் கேரட் இது எப்பவாவது.சோயாமில்க்தான் அடிக்கடி கேக்குரா.அதிகமா குழந்தைகள் குடிக்க கூடாதென்று பக்கத்தில் உள்ளவங்க சொல்ராங்க.சோயாமில்க் கொடுக்கலாமா வேண்டாமா சொல்லுங்க

எனக்கு பதிலேயில்லை பரவாயில்லை. என்னடா இவ.இவளுக்கு வேனும்னா வராநு.நினைக்காதீங்க.நான் குழந்தைகள் வச்சிக்கிட்டு ரொம்ப சிரமப்பட்டு சமாளிக்கிரேன்.அதான் ஒகேமா நான் அப்புறம் வரேன்

அன்புள்ள‌ நிசாவுக்கு,
உங்களுக்காக இணையத்தில் தேடினேன், சோயா பால்
அவ்வளவு நல்லதில்லை என்று தான் வருகிறது. தாங்களே இணையத்தில்
சோயா பாலும் அதன் பயன்களும் என்று தேடிப்பாருங்கள். ஒரு தெளிவு
நிச்சயம் கிடைக்கும். கொஞ்சம் கொஞ்சமாக‌ மாற்றிவிடுவது மிகவும் நல்லது.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நலமா?
சோயாபால் நல்லதில்லை. வேறு உண்வு கொடுத்து பழக்குங்க‌.
நீங்க‌ சோயாபாலை நிறுத்தினால் கட்டாயம் வேறு உணவுக்கு மாறிவிடுவாள்.

//பேத்திக்கு 3வயது ஆகுது. எதுவும் சாப்பாடு சாப்பிடமாட்டேங்கிறா.// தாய் இதுவரையில் ஓரளவு எல்லா உணவுகளுமே கொடுத்துப் பரிச்சயமாக்கியிருக்க‌ வேண்டுமே!

//சோயாமில்க்தான் அடிக்கடி கேக்குரா.// இதைக் கொடுத்தாலும் கூட‌ மூன்று வயதுக் குழந்தைக்கு இது மட்டும் போதும் என்று நினைக்கிறீர்களா? இப்போ கொடுக்கும் ஆகாரம்தான் குழந்தையின் அத்திவாரம். சம‌ உணவு கிடைக்காவிட்டால் பிற்பாடு உயரம், படிப்பு என்று பிரச்சினைகள் இருக்கும்.

//அதிகமா குழந்தைகள் குடிக்க கூடாதென்று பக்கத்தில் உள்ளவங்க சொல்ராங்க.// பெரியவங்களுக்கே சோயா தினமும் சேர்ப்பது நல்லதில்லை என்கிறார்கள். எப்போதாவது என்றால் பரவாயில்லை.

//சோயாமில்க் கொடுக்கலாமா வேண்டாமா சொல்லுங்க// எப்போதாவது ஒரு ட்ரீட் போல‌ மட்டும் கொடுக்கலாம். இதை ஒரு உணவு என்று கருதிக் கொடுப்பதானால் வேண்டாம்.

//எனக்கு பதிலேயில்லை பரவாயில்லை. என்னடா இவ.இவளுக்கு வேனும்னா வராநு.நினைக்காதீங்க.நான் குழந்தைகள் வச்சிக்கிட்டு ரொம்ப சிரமப்பட்டு சமாளிக்கிரேன்.அதான் ஒகேமா நான் அப்புறம் வரேன்// கர்ர்... ஆமாம், உங்களுக்கு மட்டும்தான் பிரச்சினை; மீதிப் பேர் எல்லாம் சும்மாதானே இருக்கிறோம்!! இல்லையா!! :) நீங்கள்தான் மற்றவர்களைத் தப்பாகப் புரிந்திருக்கிறீகள். எல்லோரும் பப்ளிக்கில் தங்கள் பிரச்சினைகளைச் சொல்ல‌ மாட்டார்கள். முடிகிற‌ போது உதவுவோம். முடியாத‌ போது அமைதியாக‌ இருப்போம். அதன் கருத்து உங்களுக்குப் பதில் சொல்லக் கூடாது என்பது அல்ல‌. யோசிக்காமல் இப்படிச் சொல்லக் கூடாது. எங்களுக்கும்தான் மனவருத்த‌ம் வரும். கர்ர்... இப்போதும் உங்களுக்காகப் பதில் சொன்ன‌ சகோதரிகள், தங்கள் பிரச்சினைகள் மத்தியில்தான் பதில் கொடுத்திருக்கிறார்கள்.

நிகிலா சொன்னது போல‌ //வேறு உணவு கொடுத்து பழக்குங்க‌.
நீங்க‌ சோயாபாலை நிறுத்தினால் கட்டாயம் வேறு உணவுக்கு மாறிவிடுவாள்.// கொடுப்பதை குழந்தைக்குப் பிடிக்கும் விதமாகக் கொடுங்கள். விதம் விதமாக‌ மாற்றிச் செய்து கொடுங்கள். மெனுவை அவர்களிடம் பேசி முடிவு செய்யலாம். 3 வயது... சமையல் வேலையில் சின்னச் சின்ன‌ உதவிகளைச் செய்யக் கேட்கலாம். தாங்கள் சமைத்த‌ உணவு, என்கிற‌ பெருமிதத்தில் சாப்பிடுவார்கள். மேசையில் அலங்காரமாகத் தட்டில் பரிமாறிக் கொடுத்துப் பாருங்கள். நிறைய‌ வழிகள் இருக்கின்றன‌. சாப்பிட்டால் ஒரு குட்டி சர்விங் ஐஸ்க்ரீமோ சாக்லெட்டோ கொடுக்கலாம். சாப்பிடாவிட்டால் கொடுக்காமல் காட்டிவிட்டு வைத்துவிடுங்கள். :) ஆரம்பத்தில் இடிபாடாக‌ இருந்தாலும் பிறகு வழிக்கு வருவார்.

கொடுக்கும் உணவை முதலில் பெரியவர்கள் ருசித்துப் பார்த்துவிட்டுக் கொடுப்பது முக்கியம்.

‍- இமா க்றிஸ்

3 வயசு ரெம்ப குழந்தை கிடையாது. பிள்ளையுடன் நல்ல பிரன்லி யா இருந்தா நிறைய ஒத்து போக வாக்கலாம். ரெம்ப சிரம பட தேவையில்லை. ஊட்டி விடுறது, ட்ரெஸ் ஐ போட்டு விடுறது, அதை தொடத இதை செய்யாத என்கிறது இதையெல்லாம் குறைச்சு நமக்கு சமமா கொஞ்சம் பெரியாளாக்கி மதிப்பு குடுத்து பாருங்கோ நாம செய்யிறது சாப்பிடுறதில எல்லாம் ஆர்வம் வந்துடும். நல்லா சாப்பிடுவா. அடம் பிடிக்க மாட்டா.

பூங்கோதைக்கன்னம்மா.நிக்கி.இம்மா.சுரேஞ்சினி.எல்லார்க்கும் நன்றி. இம்மா நான் பதில் யாரும் சொல்லலன்னு.எதார்த்தமாத்தான் கேட்டேன்.சாரி.எல்லாருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கு. நான் இல்லைனு சொல்லல.இருந்தாலும் நீங்கல்லாம்.எல்லாருக்கும் பதில் சொல்லி உதவி செய்பவர்கள். நான் எனக்கு தேவைப்பட்டால் இங்கு வந்து கேட்டது. எனக்கு சங்கடமாயிர்ந்தது.
என் பேத்தி எல்லாம் இதுவரை சாப்பிட்டுகிட்டு இருந்தவள்தான்.இப்ப நாங்க ஊருக்கு போய்ட்டுவந்து.இப்படி இருக்கா பால் சோயாபால் வேகவைத்தகேரட் பிரஞ்சுபிரை.பழங்கள் சாப்பிடுரா.சாப்பாடு தான் சாப்பிடல.அதான் நன்றி

நிஷா, அறுசுவைக்கு நீங்கள் புதியவர் அல்ல. சொற்களுக்கு இடையில் இடைவெளி விடுவது அவசியம். முற்றுப்புள்ளி, கமா போட்ட‌ பிறகும் ஒரு இடைவெளி தட்ட‌ வேண்டும். இதைப் பற்றி அட்மின் முன்பு சொல்லியிருக்கிறார்கள். இடுகைத் த‌லைப்பிலாவது கவனித்திருக்கலாம்.

அறுசுவையில் மட்டும் என்றல்ல‌, எங்கு என்ன‌ பாஷயில் எழுதுவதானாலும் இடைவெளி விட‌ வேண்டும். அல்லாவிட்டால் படிப்பவர்கள் கண்ணிற்குச் சிரமம்.

அடுத்து... ஒருவரது பெயரைச் சரியாகச் சொல்வது அவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை. தெரியாமல் செய்வது தப்பல்ல‌; தெரிந்தும் ஏனோதானோவென்று இஷ்டத்துக்கு அழைப்பது தப்பு. தற்செயலாக‌ நேர்ந்த‌ எழுத்துப் பிழையானால் எங்கோ ஓரிடத்தில் ஒரு எழுத்து தப்பாகி இருந்திருக்கும். இது... திரும்பப் படித்துப் பார்க்கவே இல்லை நீங்கள். ;(( என் பெயரை விடுங்கள், நிகிலா பெயரும் நிக்கி என்பது சுருக்கமாகத் தெரிவதால் விட்டுவிடலாம். மீதி இடுகையை நல்லபடி தட்டிய‌ நீங்கள், உதவியவர்கள் பெயர்களை மட்டும் எதற்காக‌ இப்படி எழுதுகிறீர்கள்? 'ஜி' தட்டுவது 'ஞ்சி‍' ‍யை விடச் சுலபமாயிற்றே! தட்டச்சு செய்ய‌ முடியாவிட்டால்... பெயர்களைக் காப்பி பேஸ்ட் செய்து போடலாம். நேரில் பார்த்துப் பேசும் போது சரியாகத்தானே அழைப்பீர்கள்! அல்லாவிட்டால்... ;) திரும்பியும் பார்க்க‌ மாட்டேன் இமா. ;))

‍- இமா க்றிஸ்

இமா.மன்னிக்கவும்.நான் நீங்க போட்ட பதிவு பார்த்து.அவசரமாகஅடிச்சதில்.தப்புப்பன்னிட்டேன்.
நிகிலா.பூங்கோதைக்கன்னமாள்.
.இமாம்மா.
சுரேஜினி.நீங்க பதிவு போட்டதுக்கு.நன்றி. உங்க பெயர் தப்பாப்போட்ட்துக்கு.மன்னிக்கவும்.

திரும்பவும் தப்பான‌ பெயர் & சொற்களுக்கு இடையே இடைவெளி விடாத‌ தட்டச்சு!

நான் எதுவும் சொல்லாமலே இருந்திருக்கலாம் போல‌.
உங்களுக்குச் சொல்வதில் பயனில்லை. ;(((

‍- இமா க்றிஸ்

இமா அம்மா நீங்க‌ டென்ஷன் ஆகாதீங்க‌........பயனில்லை என்ற‌ வார்த்தை கடுமையாக‌ உள்ளது.......தமிழில் பிழை இல்லாமல்
தட்டச்சு செய்ய‌ எல்லோரும் முயற்சிப்போம்.....கனிவாகவும் அன்பாகவும் சொல்லுங்கள் அம்மா.....

மேலும் சில பதிவுகள்