தொண்டை வலி

ஹாய் தோழிகளே எனக்கு கொஞ்ச‌ நாட்களாகவே தொண்டை அதாவது நாடிக்கு கீழ் தொண்டைகிட்ட‌ வலிக்கிற‌ மாதிரி இருக்கு.அதாவது அமுக்குற‌ மாதிரி இருக்கு.ஒரு சில‌ நேரம் உள் நாக்குகிட்ட‌ சுண்டி இழுக்கிற‌ மாரி இருக்கு.காதும் ஒரு சில‌ நேரம் அடைக்கிற‌ மாரி இருக்கு.

சளி யா இருக்கும். டாக்டர் ட்ட காட்டி எந்த இன்பெக்ஷன் ம் இல்லை எண்டால் ஒரு சிரப் எடுக்க சொல்லுவார். எதுக்கும் டாக்டரிட்ட காட்டுறது நல்லது.

ஆம். தோழி எனக்கு தொண்டை கிட்ட‌ ட்ரை அன்டு சளி இருக்குற‌ பிலிங்காகவே இருக்கு.ஆனால் எச்சில் துப்பினால் சளி எல்லாம் வர‌ மாட்டுக்கு ஆனால் தொண்டை மட்டும் அமுக்கிற‌ மாரி இருக்கு,அதான் தொண்டை டாக்டர் கிட்ட‌ காட்டனும் நினைக்கிறேன்..

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

தோழி இதற்கு நீங்கள் கண்டிப்பாக டாக்டரிடம் தான் போகணும்.என்ன வருக்கு சில மாதத்திற்கு இதேதான் சளி இருப்பது போல வலிக்கும். துப்பினால் வராது என்னனென்னமோ முயன்றுவிட்டு டாக்டரிடம் போனோம். உள் தொண்டையில் சிவப்பு சிவப்பாக புண் இருந்தது.டேப்லெட் சாப்பிட்டார்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

நன்றி தோழி

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

ஹாய் தோழி நான் சனிக்கிழமை ஹாஸ்பிட்டல் போனேன்.டாக்டர் பாத்துவிட்டு 5 டேஸ் டேப்ளட் குடுத்தாங்க‌.ச்ரி ஆச்சுனு வர‌ வேண்டாம் இல்லைனா.வாங்க‌ பிளட் டெஸ்ட் அல்லது எக்ஸ்ரே பாப்போம் சொல்றாங்க‌. எனக்கு பய்மாக‌ உள்ளது. அதாவது உணவுக்குழாய் சுருக்கம் அல்லது தைராய்டு இருக்கானு பாப்போம் சொன்னாங்க‌.அதான் எனக்கு ஒரே மனசு குழ்ப்பமாக இருக்கு..என்ன‌ பன்றுதுனே தெரியவில்லை

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

டேப்லட் சாப்பிட்டு பாருங்கள். சரி ஆகிவிடும். அப்படியும் சரி ஆகவில்லை என்றால் மதுரை, புதூரில் ஓம் சக்தி கிளினிக், Dr.கண்ணப்பன், இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு நன்றாக பார்ப்பார்.என் மாமனார் முன்பு அங்கே தான் பார்த்தார். என் கணவருக்கு இதே பிரச்சனை வந்தபோது அங்கே தான் போய் பார்த்தோம்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

உங்கள் கணவ்ருக்கு என்ன‌ மாதிரி பிரச்சனை இருந்தது.இல்லை இதே பிரச்சனைதான எனக்கு மனசு ஒரு மாதிரி இருக்கு.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

//அதான் எனக்கு ஒரே மனசு குழ்ப்பமாக இருக்கு.// இப்ப‌ குழப்பம் வேண்டாம். ///.என்ன‌ பன்றுதுனே தெரியவில்லை// கொடுத்த டாப்லட் எடுக்க ஆரம்பிச்சு 3 நாள்தானே! இது தேவையற்ற பயம். மருந்து முடிஞ்ச‌ பின்னால‌ 2 நாள் விட்டுப் பாருங்க‌. அதுக்குள்ள‌ சரியாகிரும். ஆகாட்டா... அப்போ குழம்பலாம். :‍))

ஆகாட்டா கூட‌ குழம்ப‌ எதுவும் கிடையாது. டாக்டர் சொல்ற‌ டெஸ்ட் எடுங்க‌. எதுவாக‌ இருந்தாலும் பிரச்சினை நேரத்துக்கு தெரியவந்துதே என்று சந்தோஷப்படுங்க‌. சொல்ற‌ மருந்தை எடுங்க‌. சரியாகிரும்.

தைராயிடை எல்லாம் நினைச்சு குழம்பற‌ காலம் இல்லை இது. அது ஒரு பிரச்சினையே இல்லை என்கிற‌ அளவு காண்கிற‌ எல்லோருக்கும் இருக்கு. காலைல‌ டெய்லி பல் துலக்குகிற‌ மாதிரி நினைவா டாப்லட் போட்டுட்டா சரி. உணவுக் குழாய்... டைலேட் ஆகுறதுக்கு மருந்து சொல்லுவாங்க‌. அவ்வளவுதான். பயப்பட்டு நிம்மதியைக் கெடுத்துக் கொள்ள‌ வேணாம். ஒழுங்கா சாப்பிடுங்க‌. சந்தோஷமா இருங்க‌. டாக்டர் கொடுக்கிறது பாதி மருந்துதான். நம் மனதுதான் முக்கியமான‌ மீதிப் பாதி மருந்து.

‍- இமா க்றிஸ்

இதேதான் தொண்டை வலி சாப்பிட முடியவில்லை. எச்சில் கூட முழுங்க முடியலை. அவரது டாக்டர் நண்பரிடம் பார்த்தும் கேட்கவில்லை. அவர் தான் இந்த டாக்டரிம் போக சொன்னார். அதற்கு முன்னமே என் மாமனாருக்கு இவரிடம் தான் பார்த்தோம்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

சரிங்க‌ இமா அம்மா..நானும் மனசு தைரியமாதான் இருக்கேன். இருந்தாலும் குழ்ந்தைக்கு ட்ரை இந்த‌ டைம்லா இப்படி இருந்தா ஏதாவது பிரச்சனை வரும்மோ பயமா இருக்கு.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்