glue gun பற்றிய‌ சந்தேகம்

glue gun ஐ பயன்படுத்துவது எப்படி?
க்ளூ ஸ்டிக் போடுறதில‌ இருந்து யாராவது சொல்லுங்களேன்.கூகில் பண்ணினேன்...சரியா புரியல‌..முன்கூட்டியே நன்றி சொல்லிக்கிறேன் தோழிகளே...

வேலை செய்யும் மேற்பரப்பில் ஒரு பழைய‌ நியூஸ்பேப்பர் விரித்து வையுங்கள்.

க‌ன்னில் பின்புறம் ஒரு வட்டத் துவாரம் தெரியும். அதன் வழியாக‌ ஸ்டிக் உள்ளே போகும். துவாரத்தின் அளவுக்கேற்ற‌ ஸ்டிக் போட‌ வேண்டும். ட்ரிகருக்கு மேலே உள்ள‌ இடைவெளி வழியாக‌ ஸ்டிக் தெரியும். மறு பக்கம் மட்டுமட்டாகச் சொருகிக் கொள்ளும். க்ளூ ஸ்டிக்கை வலோற்காரமாக‌ உள்ளே தள்ளக் கூடாது.

ப்ளக் பாய்ன்டில் பின்னை மாட்டி ஸ்விட்டைச் போடுங்க‌. கன்னை அதன் ஸ்டாண்டில் நிற்க‌ வைங்க‌. கன் நிற்க‌ மாட்டேன் என்று அடம் பிடித்தால் ஒயரை நேர் செய்தால் நிற்கும். போட்டு விட்டு அப்படியே விட்டுவிட்டுப் போய்ராதீங்க‌. :‍)

இடைக்கிடையே மெதுவாக‌ ட்ரிகரை அழுத்திப் பாருங்க‌. கூர் முனையில் க்ளூ வராவிட்டால் அழுத்தித் தொந்தரவு கொடுக்கக் கூடாது. அப்படி விட்டுவிட்டு சில‌ நிமிடங்கள் கழித்து முயற்சி செய்யலாம். (முனை சூ..டாக‌ இருக்கும். க்ளூவும் கொதி சூடுதான். கையைச் சுட்டுக்கொள்ள‌ வேண்டாம்.)

ஒட்ட‌ வேண்டிய‌ எல்லாப் பொருட்களையும் முதலே தயாராக‌ வைக்க‌ வேண்டும். இடையில் எழுந்து போனால்... மறந்து போகும். அப்படி மறந்தால்... ஸ்டிக் உள்ளேயே உருகி நாஸில் வழியேயும் வந்து, பொங்கி பின்பக்கமாகவும் வடிந்திருக்கும். பிறகு அது இறுகிப் போகும். கன் வேலை செய்யாது. சுத்தம் செய்வது பிரம்மப் பிரயத்தனம். ஸ்டிக்கைப் பிடுங்கவும் வராது. உள்ளேயும் போகாது. இது அனுபவம். ஸ்கூல்ல‌ நிறைய‌ கெட்டுப் போய்க் கிடக்கிறது.

ஒரு கத்தரிக்கோல் வைத்திருக்கலாம். ஒட்டும் இடத்தில் க்ளூவை வைத்ததும் ட்ரிக்கரில் அழுத்த‌ம் கொடுப்பதை நிறுத்திவிட்டு, கன்னை ஸ்டைலாக‌ ஒரு சுழற்றுச் சுழற்றி இழுத்தால் நூல் போல‌ வந்து காற்றில் காய்ந்துவிடும். அதைக் கத்தரியால் வெட்டலாம். வேலை முடிந்ததும் உடனடியாக‌ கரண்டிலிருந்து கன்னை டிஸ்கனெக்ட் பண்ணிருங்க‌. அப்படியே ஸ்டாண்டில் ஆற‌ விடுங்க‌.

வேலையை ஆரம்பியுங்கள். அனுபவத்தில் மீதி புரியும். வேறு சந்தேகம் இருந்தால் கேளுங்க‌.

‍- இமா க்றிஸ்

ரொம்ப‌ ரொம்ப‌ ரொம்ப‌ நன்றி இமா...தெளிவா அழகா விளக்கி இருக்கீங்க‌.
இப்ப‌ புரியுது...கீழே உள்ள‌ டவுட்ஸ் மட்டும் சொல்வீங்களா ப்லீஸ்..

*வேலை முடிஞ்சதும் ஸ்டிக்கை அப்படியே கன்னிலேயே விட்டுடலாமா?
*அடுத்த‌ முறை சூடாக்கும் போது நாஸில் உள்ளே இருந்த‌ கம் உருகி வந்து விடுமா?
*ஒரு ஸ்டிக் முடிந்ததும் எப்படி க்ளீன் பண்றது?
*ரொம்ப‌ நேரம் யூஸ் பண்ணிகிட்டே இருந்தாலும் கம் உருகி வெளியே வந்துடுமா
இல்ல‌ ஆஃப் பண்ணிட்டு அப்புறம் யூஸ் பண்ணனுமா?

நெறைய‌ கேள்விகள்..மன்னிக்கணும்..
அன்புடன்,
கவிதாசிவகுமார்.

anbe sivam

//*வேலை முடிஞ்சதும் ஸ்டிக்கை அப்படியே கன்னிலேயே விட்டுடலாமா?//
ஆம், விட்டுவிடலாம். விடத்தான் வேண்டும். அனேகமாக‌ உள்ளே ஒட்டியபடி இருக்கும். ட்ரிகருக்கு மேலுள்ள‌ பகுதியில் ஸ்டிக்கின் முடிவு தெரியும்போது அடுத்த‌ ஸ்டிக்கைச் சொருக‌ வேண்டும்.

//*அடுத்த‌ முறை சூடாக்கும் போது நாஸில் உள்ளே இருந்த‌ கம் உருகி வந்து விடுமா?//
ஆம், வரும்.

//*ஒரு ஸ்டிக் முடிந்ததும் எப்படி க்ளீன் பண்றது?//
க்ளீன் பண்ணுவதில்லை. இதற்கான‌ பதில் முதலாம் கேள்விக்கான‌ பதிலில் உள்ளது.

//*ரொம்ப‌ நேரம் யூஸ் பண்ணிகிட்டே இருந்தாலும் கம் உருகி வெளியே வந்துடுமா இல்ல‌ ஆஃப் பண்ணிட்டு அப்புறம் யூஸ் பண்ணனுமா?//
பயன்படுத்தும் போது இடையில் வேறு வேலை செய்ய‌ இருந்தால்... அனேகமான‌ கைவினைகளில் இப்படியான‌ சந்தர்ப்பம் வரும். இடையில் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு திரும்ப‌ போடுவதுதான் நல்லது. அல்லது முதற் பதிவில் சொன்னது போல‌ உருகி ட்ரிகர் ஸ்பேஸ் வழியாக‌ வந்து பிரச்சினை ஆகும்.
//கம் உருகி வெளியே வந்துடுமா// கொஞ்சம் வரும். வெளியே வந்து காற்றோடு தொடர்பில் வர‌ இறுகிப் போகும். சில‌ சமயம் துளித் துளியாக‌ கீழே உள்ள‌ பேப்பரில் மெழுகுத் துளிகள் போல‌ விழுந்திருக்கும். ஸ்டிக் வீணாவதைத் தவிர‌ இதனால் பயன் எதுவும் இல்லை.

‍- இமா க்றிஸ்

தாமதத்திற்கு மன்னிக்கவும்..
இவ்வளவு தெளிவா யாராலும் விளக்க‌ முடியாது..கேட்டதற்கு நேரம் செலவளித்து
பெரிய‌ பதிவா பதில் அளித்ததற்கு ரொம்ப‌ ரொம்ப‌ நன்றி இமா:‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍))

அன்புடன்,
கவிதாசிவகுமார்.

anbe sivam

மேலும் சில பதிவுகள்