எனது மகளுக்கு 1 1/2 வயது ஆகிறது. அவள் அதிகம் தக்காளி விரும்பி சாப்பிடுகிறாள். தினமும் 3 தக்காளிக்கு மேலாக அடம் பிடித்து சாப்பிடுகிறாள். இதனால் குழந்தைக்கு ஏதாவது பிரச்சினை வருமா?
எனது மகளுக்கு 1 1/2 வயது ஆகிறது. அவள் அதிகம் தக்காளி விரும்பி சாப்பிடுகிறாள். தினமும் 3 தக்காளிக்கு மேலாக அடம் பிடித்து சாப்பிடுகிறாள். இதனால் குழந்தைக்கு ஏதாவது பிரச்சினை வருமா?
தக்காளி
//தினமும் 3 தக்காளிக்கு மேலாக// அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. :)
தக்காளி நல்லது. ஆன்டிஆக்சிடண்ட்ஸ் நிறைய இருக்கிறது. அதே சமயம் அமிலத்தன்மை கொண்டது இல்லையா! தினமும் 3 என்பது அதிகமாகத்தான் தெரிகிறது. எப்போவாவது 3 அல்லது தினம் 1 என்றால் பரவாயில்லை. தொடர்ந்து இப்படி 3, 4 என்று சாப்பிட்டால்... வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்க, அது வயிற்றோட்டத்தைக் கொண்டுவரலாம். அமிலத்தன்மை அற்ற வகைத் தக்காளியும் இருக்கிறது. அதன் சுவை, தனியே சாப்பிடுவதற்கான ஆர்வத்தைத் தூண்டாது.
வீட்டில் விளையாத தக்காளி என்றால், பலர் கை பட்டு, ஈ மொய்த்து எல்லாம் இருக்கும். மறக்காமல் நன்கு கழுவிக் கொடுங்கள்.
- இமா க்றிஸ்