என் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.

என் குழந்தைக்கு மூன்று அரை மாதம் ஆகிறது அவன் நேற்றிலுருந்து முக்கிக்கொண்டே அழுகிறான் எதனால் என்று பதில் கூறுகள் தோழிகளே.....

அன்புள்ள‌ அஸ்மா 3 ஆம் தேதியில் இருந்து உங்கள் பதிவு பார்த்தேன்.
வரிசையாக‌ 3/10,5/10,8/10,10/10 என்று தொடர்ந்து நான்கு பதிவுகளும் குழந்தை
பற்றியதாகவே இருந்தது. சளி, தடுப்பூசி, வாந்தி, முக்கல் அழுகை ஆக‌
நீங்கள் குழந்தையை சரியாக கவனிக்கவில்லை. குடிப்பது உங்கள் பால் மட்டும்
தான் என்றால் தப்பு கட்டாயம் உங்களிடம் தான் என்று நினைக்கிறேன்.
ஏசி அறையில் படுக்க‌ வைப்பதை தவிர்க்கவும். நீங்களும் படுக்கக் கூடாது.
பிள்ளை பெற்றவர்களுக்கு என்று மருந்து காரக்குழம்பு ,மருத்துவம், பேறுகாலம் பகுதியில் தேடிப் பார்க்கவும். அறுசுவையிலேயே இருக்கிறது.
குப்பைமேனிக் கீரை என்று ஒன்று அது ஒன்று இப்போதைக்கு ஒரே தீர்வு உணவு முறையில், அது கீரையாகக் கிடைத்தால் அரைக்கீரை அல்லது முளைக்கீரையுடன் சேர்த்து கடைந்தோ அல்லது பொரியலாகவோ இரண்டு மூன்று நாளைக்கு சாப்பிடவும். நாட்டு மருந்து கடைகளில் பொடியாகவும்
கிடைக்கும், வாங்கி அரை தேக்கரண்டி அளவு தேன் அல்லது வெல்லத்தோடு கலந்து சாப்பிடலாம், அல்லது தக்காளி சூப்பில் கலந்தும் குடிக்கலாம். உங்கள் பால் மூலமாகவே குழந்தைக்குச் சேரும், வாந்தியாகவோ, அல்லது மலத்தின் மூலமாகவோ சளி வெளியேறிவிடும், பயம் வேண்டாம். முயற்சிக்கவும்
தற்போது விளக்கெண்ணை பயன் படுத்தினால் அதை நிறுத்தவும்.
ஒரு வாரத்திற்கு மேல் சளி, அதன் தொடர்ச்சி வாந்தி, நுரையீரலில் சளி நிறைந்த‌தால் குழந்தை மூக்கால் மூச்சு விடமுடியாமல் தவிப்பதால் முக்கல், இழுத்து மூச்சு விட‌ குழந்தை முயலும் போது ஏற்படும் வலி, அதன் விளைவு தான் குழந்தையின் அழுகை, அந்த‌ அழுகையின் மூலமாகவே தான் தன்
வாய் வழியாகவே குழந்தை மூச்சை உள்ளிழுத்து சுவாசிக்கிறான் என்று தான்
நான் நினைக்கிறேன். உடனடியாக‌ மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச்
செல்வதோடு உங்கள் உணவு முறையை ஒழுங்கு படுத்தவும். குழந்தையின்
நுரையீரலில் சளி அதிகமானால் மிகவும் தவறாகிவிடும். உடன் மருத்துவம்
பார்க்கவும். நல்லதே நடக்கும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நீங்கள் சொல்வது போல் செய்கிறேன் நன்றி மேடம்

ASSALAMU ALAIKUM..allah vidam mudhalil muraiyidugal,avane noyai tharugiran adharku marundhum avane tharugiran, piragu maruthuvam matrum alosanai galalai pinpatrungal,,,allah koorugiran,ungaludaiya seruppin var arundhalum ennidam kelungal, nambikaiyai manidhar galin mel mattum vaithu manidhargalai mattum naduvadhal than allah namakku udhava marukkiran,,,MAY ALLAH BLESS U & UR CHILD

Va alaikkum salam neenga solvathu unmai than pa na allahvidam dua kettu kondu than irukkiren pathil thantharkku romba thanks pa

Poongaithai amma unga advise konjam venum pls.bangalore vanthu 1 week achu vantha udane cold start achu payanukku.na sukku,thippili,karpura valli 2 sottu honey mix panni kodutha ippo paravala.aana sali kattuna mathiri irukku aparam mukkadaipu irukku yenna panna sollunga pls.

Innum oru doubt paiyanukku facela kannathula verkuru mathiri irukkunga amma athu salaiva patta varumnu solranga athukku yenna panna solunga pls.

பையனின் முகத்தில் உள்ள‌ எச்சில் தழும்புக்கு மருந்து
1. பூவரசங்காய் கிடைத்தால் பச்சைக்காயாகக் கிடைத்தால் நல்லது. அதை
இரண்டாக‌ நறுக்கினால் மஞ்சள் நிறத்தில் பால் வரும். அதைத் தடவினால்
தழும்பு நான்கைந்து நாள்களில் மறையும். காய் கிடைக்காவிட்டால் பூ கிடைத்தாலும் நல்லது. அல்லது காய் பூ எது கிடைத்தாலும் அவற்றை நறுக்கி
தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி வைத்துக் கொண்டு தழும்பு மேல்
தடவவும், இந்த‌ எண்ணெய்யை மற்ற‌ எந்த‌ விதமான‌ காயங்களுக்கும், தோல்
வியாதிகளுக்கும், படர்தாமரைக்கும் பயன்படுத்தலாம். கிடைக்கும் போது
காய்ச்சி ஸ்டாக் வைத்துக் கொள்வது நல்லது.
2. பப்பாளி பழத்தை நசுக்கித் தடவலாம்.
3. கடுக்காயை தண்ணீர் விட்டு கல்லில் இழைத்துத் தடவலாம்.
4. பூண்டு, வெற்றிலை இரண்டையும் சமமாக‌ எடுத்து அரைத்துத் தடவலாம்.
சளிக்கு குப்பைமேனி தான் சரியான‌ வைத்தியம். பழைய‌ பதிவுகளைப்
பார்க்கவும். முடிந்தால் மாலையில் பார்க்கிறேன்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Ormba nandringa amma kadukkai irukku atha apply pandra.kuppai meni sattrai kulanthaiku kodukkalama

அன்புள்ள‌ சத்தியா,
இப்போது குழந்தைக்கு சளி எப்படி இருக்கிறது, எச்சில் தழும்பு எப்படி
இருக்கிறது. குணம் தெரிகிறதா?
அன்புடன் பூங்கோதை கண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

அன்புள்ள‌ பூங்கோதை அம்மாவிற்கு வணக்கம்.உங்கள் ஆலோசனை தேவை.
என் குழந்தை நான்கு நாட்களாக‌ மோஷன் போகவில்லை.
பாப்பா மோஷன் போவதற்கு ஒரு வழி சொல்லுங்க‌ அம்மா.

ஹாய் விஜி

உலர்ந்த‌ திராக்ஷையை சிறிது எடுத்து இரவு நீரில் ஊறப்போடவும். காலையில் தூங்கி எழுந்ததும் அந்த‌ நீரை பருகவும். திராக்ஷையையும் உண்ணலாம். சரியாகி விடும்.

மேலும் சில பதிவுகள்