தினை-பயறு இனிப்பு கஞ்சி

தேதி: October 13, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (11 votes)

 

தினையரிசி - 50 கிராம்
தட்டைப்பயறு - 25 கிராம்
கருப்பட்டி
முந்திரி, திராட்சை
நெய், சுக்குப்பொடி, தேங்காய் - சிறிது


 

தினை, பயறு இரண்டையும் ஊற வைக்கவும். ஊறியதும் தினையை அரைத்து எடுத்துக் கொள்ளவும். பயறை நன்கு வேக வைக்கவும்.
கருப்பட்டியை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி மீண்டும் கொதிக்க விடவும்.
அதில் அரைத்த மாவை ஊற்றி கட்டி விழாமல் கலக்கவும்.
வேக வைத்த பயறை அதனுடன் சேர்க்கவும்.
நெய்யில் முந்திரி, திராட்சையை சேர்த்து வறுத்து எடுக்கவும்.
கஞ்சியுடன் சுக்குப்பொடி, தேங்காய் துருவல், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்
சுவையான இனிப்பு கஞ்சி ரெடி

இதை எங்க பாட்டிம்மா பதநீரில் செய்வாங்க. அது ரொம்ப மணமாக இருக்கும். இப்போ பதநீர் கிடைக்காததால் கருப்பட்டியில் செய்துள்ளேன். தட்டைப்பயறுக்குப்பதிலாக சிறுபயறு பயன்படுத்தலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்