எனது விபரீத‌ ஆசை

என்னங்க‌ தலைப்பைக் கண்டு பயந்து விட்டீர்களா?. எனக்குள் பல சின்ன‌, சின்ன‌ ஆசை இருக்குங்க‌. முடியாத‌, நிறைவேறாததுக்கு ஆசைப்பட‌ மாட்டேன். ஆசைப்பட்டு அவதியும் பட‌ மாட்டேன். எனக்கு எனது மனசு மட்டுமே ஆசான். மனசு என்பது லகான்,ஸ்பீட் பிரேக், லாக்கர், சீக்ரட் ஸ்டோர் ரூம், கடிவாளம், கம்யூட்டர், டைரி, வாய்ஸ் ரெக்கார்டர். அவரவர் மனசுக்குள் வெளியே சொல்ல‌ முடியாத‌ பல‌ ஆசைகள் உண்டு. ஆனால் அதில் நாம் எல்லோரும் கேடிகள் தான். எனக்கு எந்த‌ ஆசையும் இல்லப்பா நு சொல்வோம். ஆனால் அதை அப்படி சொல்வதும் ஒரு ஆசை என்பதைப் புரிந்துக் கொள்ள‌ மாட்டோம்.
''ஆசையே துன்பத்திற்கு காரணம்'''என்றார் புத்தர். யாரும் எதற்காகவும் ஆசைப்படாதீர்கள், அந்த‌ ஆசையினால் துன்பப்படாதீர்கள் என்பதே அவரது ஆசை. இதுவும் ஒரு ஆசைத்தானே.
எனக்குள் வந்த‌ விபரீத‌ ஆசையை மட்டும் இப்போது நாம் பார்ப்போம். ஒரு கானா பாட்டு எழுதனும் என்பதே எனது விபரீத‌ ஆசை. அப்பாவும், அம்மாவும் ஆசையா சேர்ந்துப் பாடுவது பாட்டு எழுதனும் நு எண்ணினேன். ஆனால் எந்த‌ குடும்பத்தைப் பார்த்தாலும் சாண்டைக் காட்சியே அதிகமா தெரியுது. அன்பு ரகசியமாகவே இருக்கிறது. எனவே அந்தக் காட்சிப் பாடல் வேண்டாம் நு விட்டேன். அண்ணன் தங்கை பாசம் பற்றிய‌ பாடல் எழுதலாம் என்று எண்ணினேன். அந்த‌ பாசமும் நம்பகமான‌ நிலைப்பாட்டில் இல்லை. சிறிய‌ வயதில் ஒரு விதமான‌ பாசம். கல்யாணம் ஆனப் பிறகு வேறுவிதமான‌ பாசம். சில‌ நேரங்களில் பாசமே போலித் தனமாகவே மாறி விடுகிறது. அதுவும் வேண்டாம் என்று விட்டு விட்டேன்.
அடுத்து நட்பு பாடல் எழுத நினைத்தேன். நட்பும் பொருளாதார‌ நிலை, சூழ் நிலைக்கேற்ப‌ மாறிவிடுகிறது. ஆழ்ந்த‌, அன்பார்ந்த‌ நட்பைக் காண‌ முடியவில்லை. ஒன்லி பேஸ்புக். வாட்ஸ் அப் ல் மட்டுமே மேலெழுந்தவாரியாய் காண‌ முடிகிறது. எனவே அதையும் நீக்கி விட்டேன்.
அப்பாடா|> எதுக்கு தேவையில்லாமல் இல்லாததைத் தேடி அலைவது. இருக்கவே இருக்கிறது, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் இருந்து இந்த‌ கலிகாலம் தொடர்ந்து நடைப்பெறும் அற்புதமான‌, ஆனந்தமான‌, ஆபத்தான‌, பிரச்சனையான‌, விபரீதமான‌ ஒரு அன்பு அதுதாங்க‌ ''காதல்''அதையே தலைப்பாகக் கொண்டு ஒரு கானாப் பாட்டு எழுதுகிறேன். அதுதானே எனது ஆசை. கானாப் பாட்டுக்கு வரைமுறைக்கிடையாது. பாட்டுக்கு பொருள் விளக்கம் தேவையில்லை. கருத்து சுதந்திரம் உண்டு. எனவே கானாப் பாட்டு எழுத‌ முயற்சி செய்தேன்.
காதல் பாடல் வர‌ வேண்டியக் காட்சி‍‍‍_____காதலன், காதலியின் கை விரல்கள், கைகள், கன்னத்தைத் தொடுகிறான். முத்தம் கொடுக்கிறான். காதலி
பொய்யான‌ கோபத்துடன், இது தப்புங்க‌, அது தப்புங்க‌ நு சொல்லி சினுங்குகிறாள். அதற்க்கு காதலனும் இது தப்பில்லை, அது தப்பில்லைனு கொஞ்சுகிறான். அப்போது காதலனும், காதலியும் பாடும் காதல் பாட்டு.

காதலி; தப்பு, தப்பு தப்புத் தாங்க‌,இது
தப்பு, தப்பு, தப்புத் தாங்க‌,

காதலன்; தப்பில்ல‌, தப்பில்ல‌ தப்பில்லடி, இது
தப்பில்ல‌, தப்பில்ல‌, தப்பில்லடி.

காதலி; உன் ஆறடி உயர அழகினில் மயங்கி
உன்னை அனைத்து கட்டிக் கிட்டேன் இணங்கி
என் ஆறறிவும் அழிஞ்சிப் போச்சி கலங்கி
இப்ப‌ ஆதரவா உங் கையைப் பிடிச்சேன் இணங்கி
தப்பா, தப்பா, தப்புத்தாங்க‌
காதலன்; தப்பில்ல‌, தப்பில்ல‌, தப்பில்லடி.

காதலன்; பீச்சிலே நிற்கும் போது, நீ பீர் பாட்டிலு
காலேஜ்லே இருக்கும் போது நீ கட்டழகி
சினிமா தியட்ரலே உன்ன‌ பார்க்கும் போது டாஸ்மார்க்
திருவிழாவிலே சுற்றும் போது நீ உலக‌ அழகி. உன்ன‌
கிட்டத்தில் பார்க்கும் போது உன்ன‌
கிட்டத்தில் பார்க்கும் போது ம்ம்ம்ம்ம்ம்
காதலி; கிட்டத்தில் பார்க்கும் போது

காதலன்; போடி நா சொல்ல‌ மாட்டேன், ம்ம்
போடி நா சொல்ல‌ மாட்டேன்.
காதலி; போடா நானு கேட்க‌ மாட்டேன், ம்ம்
போடா நானு கேட்க‌ மாட்டேன்.

[[[பாட்டு பிடிச்சவங்க‌ பாடிப் பாருங்க‌, பிடிக்காதவங்க‌ படித்துப் பாருங்க‌. அப்பாடா எப்படியோ என் ஆசை நிறைவேறிவிட்டது.]]].

5
Average: 5 (1 vote)

Comments

கதை, கவிதை, கானாப் பாட்டுனு கலக்கல். வாழ்த்துக்கள் மா!!!

"Patience is the most beautiful prayer !!!"

சூப்பரா இருக்கு. காதலிலும் சில‌ பல் ப்ரச்சனை உண்டு. ஆனாலும் பாட்டு சூப்பரோ சூப்பர். கவித‌ கவித‌. ஆனா பாட‌ முடில‌. ஏனா ராகம் தெரியல‌. படிச்சு தான் பார்த்தேன். சூப்பரா இருந்துச்சி.

அந்த‌ கடைசி வரியில் "உன்ன‌ கிட்டத்தில் பார்க்கும் போது" என்ன‌? காதலிக்கு வேணா தெரிஞ்சிக்க‌ ஆசையில்லை. எனக்கு ரகசியம் தாங்கலை. சொல்லுங்க‌ அம்மா......

எல்லாம் சில‌ காலம்.....

hai,
Your vazththuku Thank u.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்,

''சூப்பரோ சூப்பர்''பாராட்டுக்கு நன்றி. ''உன்ன‌ கிட்டத்தில் பார்க்கும் போது'''அது காதல் ரகசியம். யுவர் சாய்ஸ் நீங்க‌ எப்படினாலும் கற்பனை செய்துக் கொள்ளுங்கள்.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு